Skip to main content

Posts

Showing posts from August, 2018

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு அமைச்சரவை ஒப்புதல்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப் பட்டது. விலைவாசி உயர்வை கருத் தில் கொண்டு 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் அக விலைப் படி உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப் படும். இந்த அகவிலைப்படி உயர் வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62.03 லட்சம் ஓய் வூதியதாரர்களும் பலன் பெறுவார் கள். இதனால், அரசுக்கு ஆண் டுக்கு ரூ.6,112.20 கோடி கூடுதல் செலவாகும். 2018-19 நிதியாண்டில் அரசுக்கு 4,074.80 கோடி செலவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்

தமிழக போலீஸ் கைரேகை பிரிவிற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணி இடங்கள் தமிழக போலீஸ் கைரேகை பிரிவில் 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் பதவி காலியாக உள்ளது. அந்த காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு 202 சப்-இன்ஸ்பெக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்ப மனுக்களை www.tnusr-b-o-n-l-i-ne.org என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். உதவி மையம் விண்ணப்ப மனுக்களை அனுப்புவதற்கான கடைசி நாள் 28-9-2018 ஆகும். விண்ணப்ப மனுக்கள் தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் செயல்படும் உதவி மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளாம். இந்த உதவி மையம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த உதவி மையம் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள இதர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் செயல்படும். உதவி மையத்தை 044-40016200, 044-28413658, 9499008445, 9176243899, 9789035725

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய அளிக்கப்பட்ட கால அவகாசம் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினார்கள். வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம் அதாவது வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர். வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மொ

69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அமலில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக சி.வி.காயத்ரி உள்ளிட்ட சில மாணவ, மாணவிகள் சுப்ரீம் கோர்ட்டில் 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில், 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, கடந்த சில ஆண்டுகளாக செய்துவருவதுபோல மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றி மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மாதம் 1-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, முந்தைய ஆண்டுகளில் தனித்தனி மனுக்களின் மீது கூடுதலாக இடம் ஒதுக்கி அனுமதி வழங்கியிருந்தாலும் இப்போது அதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது. 69 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று தனி கோரிக்கை எதுவும் விடுக்கப்படாததால் உங்கள் மனுவை தள்ளுபடி செய்கிறோம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு |

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- இன்று (சனிக்கிழமை) மாலை 4.05 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.40 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்தநேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.  

வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முடிவு 

தமிழகத்தில் மொத்தம் 20 சுங்கச் சாவடிகளில் வரும் 1-ம் தேதி முதல் 10 முதல் 12 சதவீதம் வரை யில் கட்டணம் உயர்வு செய்து வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 45 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுழற்சி அடிப்படையில் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் என தனித்தனியாக பிரித்து சுங்கச்சாவடி களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த கட்டண உயர்வு களால் போக்குவரத்து நெரிசலை கணக்கு காட்டி அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்படுகிறது. இதேபோல், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே வழக்கம்போல், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மொத்தம் 20 சுங்கச்சாவடிகளில் 10 முதல் 12 சதவீதம் வரையில் கட்டணம் உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை விரைவில் வெளியிடவுள்ளது. இதில், சேலம்-உளுந்தூர் பேட்டை- மேட்டுப்பட்டி, திண்டிவனம் -உளுந்தூர்பேட்டை, நல்லூர் - சென்னை, திருச்சி-திண்டுக்கல், நத்தக்கரை-வீரசோழ புரம், விக்கிரவாண்டி - தடா (ஆந்திர மாநிலம்), பொன்னம்பலபட்டி

எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ‘விவோ எக்ஸ் 21’ போன்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் விவோ. இந்த நிறுவனம் புதிதாக விவோ எக்ஸ் 21 மொபைல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப்பார்த்து ‘ஐ அம் இம்ப்ரெஸ்ட்’ என்று சொல்லாமல் யாரும் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு அதன் சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன. விவோவின் ஒவ்வொரு புதிய மாடல் போன் அறிமுகத்தின் போதும் மக்களிடையே எதிர்பார்ப்பு காணப்படும். அதில் இம்மியளவும் ஏமாற்றம் இல்லாமல் வெளிவந்துள்ளது தான் விவோ எக்ஸ் 21. 6.28 அங்குலம் அளவில் டிஸ்பிளே அமைந்துள்ளது. இதனால் கேம் விளையாடும் போதும், வீடியோ பார்க்கும் போதும் பிரம்மாண்டமான தோற்றத்தை கண்களுக்கு விருந்தாக்குகிறது. போனை ‘அன்லாக்’ செய்ய நம் முகத்தை ‘ஐ.டி’யாக பயன்படுத் தலாம். அல்லது கை ரேகையை கொண்டும் ‘அன்லாக்’ செய்யலாம். இதனால் நம் அனுமதியின்றி யாரும் நமது போனை உபயோகிக்கவோ, தகவல்களை பார்க்கவோ இயலாது. இந்த போனில் ‘இன்ப்ரா ரெட் சென்சார்கள்’ உள்ளன. இதனால் இருட்டில் கூட நம் முகத்தை அடையாளம் தெரிந்து கொண்டு போனை ‘அன்லாக்’ செய்யும் வசதி இதில் உள்ளது. போட்டோவை எடுத்த பின்பு அதை போட்டோஷாப் மென்பொருளை பயன்படுத்தி அதை அழகாக்கும் வேலை எல்லா

எண்ணம்போல இசைமழை பொழியும் ‘ஹெட்செட்’

உங்கள் மனநிலை, சிந்தனை ஓட்டம் இவற்றை புரிந்துகொண்டு அந்த சூழ்நிலைக்கு ஏற்ப இசை மற்றும் பாடல்களை ஒலிபரப்பி உங்கள் உள்ளத்தை இதமாக்கும் நவீன தயாரிப்பு தான் இந்த ஐமெக் இ.இ.ஜி. ஹெட்செட் ( IMEC EEG He-a-d-S-et ) . இதய துடிப்பை அளவிடும் இ.சி.ஜி. ( ECG ) குறித்து கேள்விப்பட்டிருப்பீங்க. இ.இ.ஜி. ( EEG ) என்றால் என்ன என்று தெரியுமா? எலெக்ட்ரோ என்செபாலோக்ராம் ( el-e-c-t-r-o -e-n-c-e-p-h-a-l-o-g-r-am ) என்ற தொழில்நுட்பம் தான் இ.இ.ஜி. எனப்படுகிறது. அதாவது, நம் மூளையில் தோன்றும் எண்ண அலைகளை எலெக்ட்ரோடுகளை வைத்து ட்ராக் செய்யும் தொழில்நுட்பம் தான் இது. இதை அடிப்படையாக வைத்து பெல்ஜியம் நிறுவனமான ‘ஐமெக்’ ( IMEC ) ஒரு ஹெட்செட்டை தயாரித்து இருக்கிறது. இந்த வயர்லெஸ் ஹெட்செட் உங்கள் மூளையின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. நம் மனநிலைக்கு ஏற்றவாறு இனிய இசையை இந்தக்கருவி இசைக்கிறது. அதாவது மனம் சோர்வாக இருக்கும் போது நல்ல இசையை ஓடவிட்டு நமது மனநிலையை மாற்றுமாம். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகஸ் நகரில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த புதிய தயாரிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் நீங்க ச

போர்டபிள் சார்ஜர்

எவ்வளவு பெரிய போன் மாடலாக இருந்தாலும் சரி, அதிக விலை போன் என்றாலும் சரி... போன் பேட்டரியின் சார்ஜ் ஒருநாளுக்கு மேல் நீடிப்படிப்பதில்லை. இதனால் பெரும்பாலும் ‘பவர் பேங்க்’ எனப்படும் தற்காலிக பவர் சார்ஜரை மக்கள் பயன்படுத்துகின்றனர். இவை கனமாகவும், சற்றும் தடிமனாகவும் இருப்பதால், இதை சுமப்பது என்பது சற்று கடினமான ஒன்றுதான். ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மிகவும் லேசான போர்ட்டபிள் சார்ஜர்கள் வந்திருக்கின்றன. ‘பிங்கர்போ போர்டபிள் சார்ஜர்’ என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கும் இந்த சார்ஜர் பார்ப்பதற்கு மிகவும் சிறியதாக அதேசமயம் தொடர்ந்து ஸ்மார்ட்போனில் பேசுவதற்கு உதவியாக உள்ளது. சிறிய யு.எஸ்.பி. போர்ட் போல அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த சார்ஜரை இணைக்க வயர் தேவையில்லை. போனில் சொருகும் வகையில் இதில் ‘பின்’ உள்ளது. இந்த சார்ஜர் இடத்தை பெரிதும் அடைத்துக் கொள்ளாது. இதனால் போனுடன் பாக்கெட்டிலேயே இந்த சார்ஜரையும் வைத்து கொள்ளலாம். சார்ஜரில் பேட்டரி அளவு குறைந்துவிட்டால் அதற்குரிய சார்ஜரில் போட்டு அதை சார்ஜ் செய்யலாம். ஒரு சார்ஜிங் டிவைசில் நான்கு போன்களை சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். இத

இறுதிப் பட்டியலில் 4 நடிகர்கள் விஜய்க்கு சர்வதேச விருது கிடைக்குமா?

விஜய் நடித்துள்ள மெர்சல் படம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இதில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் பாடலுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு வந்தது. இந்த நிலையில் மெர்சல் படம் ‘ஐஏஆர்ஏ’ என்ற சர்வதேச விருதுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விருதுக்கு சிறந்த நடிகர்களாக ஹாலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட பலர் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். அதில் விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த பட்டியலில் இருந்து 4 பேரை தேர்வு செய்து இறுதிப் பட்டியல் வெளியிட்டு உள்ளனர். அதில் விஜய், கென்னத் ஓகோலி, டைம்ஹசன், ஜோஷூவா ஜேக்‌ஷன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. சிறந்த நடிகருக்கான பட்டியலில் விஜய் பெயர் இறுதி சுற்றுக்கு வந்து இருப்பது விஜய் ரசிகர்களை மேலும் கொண்டாட வைத்து இருக்கிறது. இதில் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விருது வழங்கும் விழா 22-ந் தேதி லண்டனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆதார் தகவல் சரிபார்ப்பில் முக அடையாளம்  செப்டம்பர் 15-ம் தேதி முதல் படிப்படியாக அமலாகிறது

முகத்தைக் கொண்டு ஆதார் தகவல்களை சரிபார்க்கும் முறையை கூடுதல் சரிபார்ப்பு முறையாக பயன்படுத்துவது செப்டம்பர்-15 முதல் அமலுக்கு வர இருப்பதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக தொலைத் தொடர்பு நிறுவனங் கள் மட்டும் இந்த முறையைப் பயன்படுத்த உள்ளதாக யுஐடிஏஐ தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூலை-1 முதல் இதை அமலாக்க திட்டமிட்டிருந் தது, பின்னர் ஆகஸ்ட் 1-க்கு தள்ளிவைக்கப்பட்டது தற்பொழுது செப்டம்பர் -15 முதல் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இந்த முறையைப் பயன்படுத் துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை எட்டாத தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அடுத்த மாத மத்தியில் இருந்து அபராதம் விதிக்கவும் யுஐடிஏஐ முடிவு செய்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங் கள் தவிர பிற தகவல் சரிபார்ப்பு அமைப்புகள் முகத்தைக் கொண்டு தகவல்களை சரிபார்ப்பதை எப் பொழுது அமல்படுத்த வேண்டும் என்பது குறித்த தகவல்களை யுஐடிஏஐ வெளியிடவில்லை. -பிடிஐ

அடுத்த ஆண்டிலிருந்து ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது உள்துறை அமைச்சகம் உத்தரவு

நகர்புற ஏடிஎம்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து இது நடைமுறைக்கு வர உள்ளது. மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஏடிஎம்களில் மாலை 6 மணிக்கு மேல் பணம் நிரப்பக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஏடிஎம் மையங்களில் நடக்கும் கொலை, கொள்ளையைத் தடுக் கும் முயற்சியாக இந்த நடவடிக்கை களை மத்திய உள்துறை அமைச் சகம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஏடிஎம் மையங்களைப் பராமரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் வகுத்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. நக்சலைட் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேல் ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படாது என்றும் தெரிவித்துள்ளது. ஏடிஎம் மையங்களுக்கான பணத்தை கையாளும் நிறுவனங்கள் வேலை நாட்களில் முதல் பாதியில் வங்கி யிலிருந்து பணத்தை பெற வேண் டும். கவச வாகனங்களை பயன் படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த புதிய செயல் பாட்டு நடைமுறைகள் அனைத் தும் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதியில் இருந்து செயல்படுத்தப் படும். நாட்டில் மொத்தம

குரூப்-2 பணி...அழைக்கிறது அரசுப்பணி...

ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரூப்-2 பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா முழுதும் நடைபெற்ற குடிமைப் பணிகள் (ஐ.ஏ.எஸ்.) தேர்வு கூட 900+ இடங்களைத்தான் வழங்கியது. ஆனால் தமிழ்நாட்டுக்குள் மட்டும், குரூப்-2 அலுவலர்கள் 1179 இடங்கள் இது மிகப் பெரிய வாய்ப்பு. நன்கு முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம். இந்த பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 9-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 11 காலை, முதல் நிலைத் தேர்வு நடக்கிறது. அதன் பிறகு, முதன்மைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு (oral test). கல்வித் தகுதி - ஏதேனும் ஒரு பட்டம் முடித்து இருக்க வேண்டும். எத்தனை வயது வரை விண்ணப்பிக்கலாம்..? இங்குதான் டி.என்.பி.எஸ்.சி. தனித்து விளங்குகிறது. பொதுப் பிரிவினர் அல்லாத, எஸ்.சி. எஸ்.டி. மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது. 58 வயதிலும் அரசுப் பணிக்குள் நுழைய முடியும். குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியது, இஸ்லாமிய சமயத்தைத் தேர்ந்த சிறுபான்மையினர், மேற்சொன்ன வயது

ஆகஸ்ட் 27 முதல் பதஞ்சலியின் கிம்போ செயலி

பதஞ்சலி நிறுவனம் தன்னுடைய கிம்போ செயலியை மீண்டும் மறு அறிமுகம் செய்ய இருக்கிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்த செயலி அறிமுகம் செய்யப் பட்டது. ஆனால் அதில் பிரச்சினை ஏற்பட்டதால் கூகுள் பிளேஸ்டோ ரில் இருந்து நீக்கப்பட்டது. தற் போது தொழில்நுட்ப மாற்றங்களை செய்து மீண்டும் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடி யும். அதேபோல ஆப்பிள் போனி லும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது. பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால் கிருஷ்ணா கூறும்போது, புதிய வசதிகளுடன் கிம்போ செயலி தயாராக இருப்பதாக தெரிவித்தார். மே மாதம் 31-ம் தேதி இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பு ரீதியில் இந்த செயலி பலவீனமாக இருப்ப தாக பல வல்லுநர்கள் தெரிவித் திருந்தனர். தற்போது இந்த செய லியில் பாதுகாப்பு வசதிகள் செய் யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. செயலி அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த 12 நாட்களில் 10 லட்சம் நபர்கள் இதனை பதிவிறக்கம் செய் வார்கள் என எதிர்பார்க்கிறோம். பாபா ராம்தேவ் மற்

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெறும்  நாளை மாலை 5 மணிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் தொடங்கி வைக்கிறார் 

சென்னை புத்தகத் திருவிழா ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் 4-வது சென்னை புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் இந்தப் புத்தகத் திரு விழாவில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள், கோடிக் கணக்கான புத்தகங்கள் இடம்பெற உள்ளன. புத்தகத் திருவிழாவை ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகக் கண்காட்சி நடைபெறும். புத்தகத் திருவிழாவில் கவிதை வாசிப்பு, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், சமூகம், அரசியல், சினிமா, சுற்றுச்சூழல் குறித்த கருத்தரங்கங்கள், வாசகர் வினாடி-வினா போட்டி ஆகியவை நடைபெற உள்ளன. விழாவின் நிறைவாக ஆகஸ்ட் 27-ம் தேதி 2017, 2018-ம் ஆண

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிப்பதால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது: வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒடிசா கடற்கரைப் பகுதியில் புவனேஸ்வருக்கு தென்கிழக்கே சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். இந் நிலையில் ஈரப்பதத்துடன் கூடிய மேற்குதிசைக் காற்று, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கி, தமிழகப் பகுதிகள் வழியாக செல்லக்கூடிய நிலையில், அடுத்து வரும் 24 மணி நேரத்தில் மலைப்பகுதிகள் அடங்கிய நீலகிரி மற்றும் வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டப் பகுதி களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும

டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்

டெல்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில் உள்ள வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதாலும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த ஜூன் மாதம் 11-ந் தேதி அங்குள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியில் (எய்ம்ஸ்) அனுமதிக்கப்பட்டார். சமீபத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை பற்றி விசாரித்தார். கடந்த சில நாட்களாக வாஜ்பாயின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி நேற்று மாலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயை பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். மத்திய ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானியும் ஆஸ்பத்திரிக்கு சென்று வாஜ்பாயின் உடல்நிலை பற்றி விசாரித்தார். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரமாக வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவ

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு கடுமையான தண்டனை தேவை -நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் பட உலகுக்கு வந்த சமீபத்திய கதாநாயகிகளில் குறுகிய காலத்தில் மளமளவென வளர்ந்து இருப்பவர், கீர்த்தி சுரேஷ். வசீகர சிரிப்பாலும், துடுக்குத்தன நடிப்பாலும் ரசிகர் பட்டாளத்தை ஈர்த்து இருக்கிறார். 2013-ல் ‘கீதாஞ்சலி’ என்ற மலையாள படத்தில்தான் இவருக்கு கதாநாயகியாக அறிமுகம் கிடைத்தது. அடுத்த 2 வருடங்களுக்கு பிறகு ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு வந்தார். அதன்பிறகு, ‘ரஜினிமுருகன்’ படத்தின் வெற்றி அவரை பிரபலமாக்கியது. தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் என்று தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘நடிகையர் திலகம்’ படம் இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்து திறமையான நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. கீர்த்தி சுரேஷ் இப்போது முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இருக்கிறார். விஜய் ஜோடியாக சர்கார், விக்ரமுடன் சாமி-2, விஷாலுடன் சண்டக்கோழி-2, சிவகார்த்திகேயனுடன் சீமராஜா என்று ‘பிஸி’யாக இருக்கிறார். தெலுங்கு பட உலகிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். திரையுலக பயணம் குறித்து கீர்த்தி சுரேஷ் மனம் திறந்து சொன்னவை:- “

TNPSC - GROUP-IV CERTIFICATE UPLOAD FRO E SEVA CENTERS - 30.08.2018 AND 18.09.2018

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 23/2017 ன் படி தொகுதி 4 ல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை 11.02.2018 அன்று நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை (தரவரிசைப் பட்டியல்) 30.07.2018 அன்று வெளியிட்டது. அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிபணியிடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு இந்த தெரிவுக்கென சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய தேதி 16.08.2018 முதல் 30.08.2018 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கூடுதல் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டதன் காரணமாக இன சுழற்சி அடிப்படையில் எந்தெந்த வகுப்பினருக்கு துறைவாரியாக எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு அதற்குறிய சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை கண்டறிய கூடுதலாக கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் 27.08.2018 அன்று தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்படும். அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண

ஆச்சரியம் அளிக்கும் அமேசானின் ‘அலெக்ஸா’

தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே உள்ளது. புதுப் புது வரவுகள் இதைத்தான் உணர்த்துகின்றன. மனிதர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ரோபட்டுகள் ஒரு வகை. அதுபோல நமது குரல் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் கருவிகள் வரத்தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்யும் அமேசான் நிறுவனத்தின் ‘அலெக்ஸா’ மிகவும் பிரபலமானது. ‘அலெக்ஸா’ என்பது ஒரு ‘மெய்நிகர் உதவியாளர்’. ஆங்கிலத்தில் சொல்வதென்றால் விர்ச்சுவல் அசிஸ்டன்ட் ( Vi-r-t-u-al As-s-i-t-a-nt ). உருளை போன்ற தோற்றத்தில், ஒரு டம்ளர் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஸ்பீக்கர் போன்று காட்சியளிக்கும் ‘அலெக்ஸா’ இன்டர்நெட் இணைப்பு மூலம் இயங்கக்கூடியது. இது நம் வீட்டில் உள்ள ஸ்மார்ட் கருவிகளுடன் இணைந்து செயல்படும். உதாரணத்திற்கு நம் வீட்டில் உள்ள ஸ்மார்ட் ரெப்ரிஜ்ரேட்டருடன் ‘அலெக்ஸா’ இணைந்து செயல்படும். அதாவது பிரிட்ஜில் உள்ள உணவுப்பொருள் காலியாகி விட்டால் இதை ‘அலெக்ஸா’ அறிந்துகொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு தகவல் கொடுத்து பொருட்களை தருவிக்கும். அல்லது உங்களுக்கு பிரிட்ஜில் இருந்த பிரட் தீர்ந்து விட்டது என்று தகவல் ச

எண்ணெய் இன்றி பொரிக்க உதவும் ‘ஏர் பிரை’

எண்ணெயில் பொரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கிறது. சுவையான உணவைக் காட்டிலும் சத்தான உணவை சாப்பிட வேண்டும் என்ற சிந்தனை மக்களிடம் அதிகரித்து வருகிறது. எண்ணெய் இன்றி, அதே நேரத்தில் உணவின் சுவை மாறாமல் பொரிக்க உதவுவதுதான் ‘ஏர் பிரை’. சமையலறையில் நவீன வரவான ஏர் பிரையரில் வெப்பக் காற்று பரவி உணவை சமைக்க உதவுகிறது. இதனால் எண்ணெய் வைத்து பொரிக்க வேண்டியதில்லை. இதில் 360 டிகிரி பாரன் ஹீட் வரை வெப்பம் பரவும். இதனால் சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவுகளையும் சுவைபட சமைக்க முடியும். கடாயில் எண்ணெய் ஊற்றி பொரிப்பதை விட ஏர் பிரை மூலம் பொரிப்பது சிறந்தது. ஏர் பிரையில் காய்கறி, அசைவ உணவுகளை சமைப்பதற்கு எண்ணெய் அவசியமில்லை. உணவின் மீது லேசாக எண்ணெய் தடவியிருந்தாலே அது மொறுமொறுப்பான சுவையை அளிக்கும், தேவைப்பட்டால் மிகக் குறைந்த அளவில் சமையல் எண்ணெய்யை பயன்படுத்திக் கொள்ளலாம். வழக்கமாக எண்ணெயில் பொரிப்பதை விட 80 சதவீத அளவுக்கு குறைவான எண்ணெயே போதுமானது. ஆரோக்கியமான சமையலுக்கு உதவும் இந்த புதிய வரவுக்கு பெண்கள் தரப்பில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

புதிய போன் வாங்கப்போறீங்களா? ஒரு நிமிஷம்... இதைப்படிங்க...

புதிய போன் வாங்கப்போறீங்களா? ஒரு நிமிஷம்... இதைப்படிங்க... புதிதாக ஒரு மொபைல் வாங்க வேண்டுமெனில் நீங்கள் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய விஷயங்களை பற்றி பார்க்கலாம்: * முதலில் உங்கள் பட்ஜெட் என்ன என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள். * அடுத்ததாக அந்த விலைக்குள் கிடைக்கக்கூடிய மொபைல் போன்களை பட்டியலிடுங்கள். * அந்த பட்டியலில் இருந்து தரமான கம்பெனி மொபைல்களை தேர்ந்தெடுங்கள். * சமீபத்தில் வெளியான மொபைல் போனை தேர்வு செய்வதே சிறந்தது. ஏனெனில் அதில் தான் புதிதாக நிறைய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். * நீங்கள் வாங்க நினைக்கும் போனில் ‘பிராஸசர்’ (pr-o-c-e-s-s-or) திறன் எவ்வளவு என்பதை கவனிக்க வேண்டியது மிக முக்கியம். இதை பொறுத்தே போனின் செயல்திறனும், பேட்டரியும் அமையும். உங்களுடைய பட்ஜெட் 7 ஆயிரம் ரூபாய் எனில் ஸ்னாப்ட்ராகன் 425 அல்லது 430 பிராஸசர் நல்ல தேர்வாகும். 10 ஆயிரம் ரூபாய் எனில், ஸ்னாப்ட்ராகன் 625 அல்லது 630 பிராஸசர் நீடித்த செயல்திறன் கொண்டதாகும். * மீடியாடெக் பிராஸசர்கள் இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே உழைக்கின்றன. எனவே ஸ்னாப்ட்ராகன் தேர்ந்தெடுப்பது நன்மை பயக்கும்.

நோக்கியாவின் அதிரடி தயாரிப்புகள்

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நோக்கியா நிறுவனம் சமீபத்தில் நோக்கியா-3, நோக்கியா-5 மற்றும் நோக்கியா-6 என்ற பெயரில் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்புகளை இங்கே காண் போம். நோக்கியா-3 இதன் விலை சுமார் ரூ. 9,499. விலை குறைந்த ஸ்மார்ட் போன்களில் முன்னணியில் உள்ள போன் இதுவாகும். பாலிகார்பனேட் பாடி மற்றும் அலுமினியம் பிரேம் கொண்டது. 5 அங்குல டிஸ்பிளே, சிங்கிள் மற்றும் டுயல் சிம் வசதிகள், 8 எம்.பி. கேமரா, காரினிங் கொரில்லா கிளாஸ் திரை, ஆண்ட்ராய்ட் நவ்கட் ஓ.எஸ். 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. இன்டர்னல் மெமரி, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் பிராஸசர், 2650 mAh பேட்டரி, LTE 4நி இணைப்பு வசதி ஆகியவை உள்ளன. நோக்கியா-5 இந்த போன் சுமார் ரூ. 12,899 விலை கொண்டதாகும். 5 அங்குல பொலரைய்ட் HD காட்சி திரை கொரில்லா கண்ணாடியுடன் ஆனது. ஆண்ட்ராய்ட் 7.1.1 நவ்கட் மென்பொருள், ஸ்னாப்ட்ரகன் 330 பிராஸசர், 2 ஜி.பி. ரேம், 8 மெகா பிக்ஸல் கேமரா, ஆட்டோ போகஸ் வசதி, 4 ஜி இணைப்பு வசதி, 16 ஜி.பி. சேமிப்பு வசதியும் இதை 128 ஜி.பி. வரை விரிவுபடுத்தி பயன்படுத்தும் வசதியும் இந்த போனில் உள்ளது. நோக்கியா-6 இதன்

கேமிங் லேப்டாப் விலை ரூ. 8 லட்சம்!

‘ஏசூஸ்’ நிறுவனம் கம்ப்யூட்டரில் விளையாடுவோருக்கென பிரத்யேகமான லேப்டாப்பை உருவாக்கி வெளியிட்டுள்ளது. ‘ஏசூஸ் ஆர்.ஓ.ஜி. ஜி.எக்ஸ் 800’ என்ற பெயரில் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும், இந்த லேப்டாப்பின் விலை ரூ.8 லட்சமாகும். மெக்கானிக்கல் கீ போர்டு அதாவது விளையாட்டுப் பிரியர்களுக்கான ஜாய் ஸ்டிக்கும் இந்த லேப்டாப்பில் உள்ளது. க்வாட் கோர் 2.9 கிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ7 7820 ஹெச்கே பிராசஸர், 64 ஜிபி ரேம் மற்றும் மூன்று 512 ஜிபி பிசிஎல்இ எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது. இது 18.4 அங்குல எல்.இ.டி. பேக்லைட் திரையுடன் வந்துள்ளது. இடையூறின்றி விளையாடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 3 யுஎஸ்பி போர்ட்களை இணைக்கலாம். கிகாபிட் எதர்நெட், ஹெச்டிஎம்ஐ போர்ட், மினி டிஸ்பிளே போர்ட், தண்டர்போல்ட் 3.0 மற்றும் 10 ஜிபிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி 3.1 (இரண்டாம் தலைமுறை) உள்ளிட்டவை இதில் உள்ள சிறப்பம்சமாகும். நீண்ட நேரம் விளையாடினாலும் பிராசஸர் மற்றும் கிராபிக் கார்டு சூடேறுவதை தடுக்கும் வசதியும் உள்ளது.

‘நீங்கள் விரும்பும் வேகம்’ ஒன் பிளஸ் 6 அறிமுகம்

ஒரு மொபைல் போனை வாங்கவும், அதன் அறிமுக விழாவைக் காணவும் இத்தனை ரசிகர்களா என்று ஆச்சரியம் தந்த விழா அது. மும்பையில் நடந்த விழாவில் பங்கேற்ற பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டபிறகுதான், அறிமுக விழாவுக்கு ஏன் பிரம்மாண்டமான உள்ளரங்கைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது புரிந்தது. சீனாவின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ‘ஒன் பிளஸ்’ மிகவும் பிரபலம். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதற்கென தனி ஒன் பிளஸ் சமூகமே உள்ளனர். இந்தியாவிலும் இத்தகைய குழுவினர் உருவாகி வருவதை ஒன் பிளஸ் 6 அறிமுக விழாவில் பார்க்க முடிந்தது. ஆப்பிள் போனுக்கு அடுத்தபடியாக மிகுந்த எதிர்பார்ப்பு ஒன் பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு உள்ளது. இது 6.28 அங்குல திரை கொண்டது. முந்தைய மாடலைவிட பெரிய திரையை இது கொண்டுள்ளது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 தொழில்நுட்பத்துடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இதுவரை தயாரித்துள்ள ஸ்மார்ட்போன்களில் அதி விரைவான செயல்பாடுகளைக் கொண்ட ஸ்மார்ட்போன் ஒன் பிளஸ் 6 என்று பெருமையுடன் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வழக்கம்போல அமேசான் இணையதளத்தின் மூலமே வாங்க முடியும். இதில் 1 கிகா பைட் டவுன

அனைவரையும் கவரும் ‘ஹானர்’ ஸ்மார்ட்போன்

ஹூயாவெய் நிறுவனத்தின் துணை பிராண்டான ‘ஹானர்’ இரண்டு லென்ஸ் கொண்ட கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற விழாவில் இந்த ஸ்மார்ட்போன்களை இந்தி நடிகை நேஹா தூபியா அறிமுகம் செய்தார். பிளிப்கார்ட் இணையதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க முடியும். ஹானர் 7ஏ மாடல் 3 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. நினைவகத்துடன் வந்துள்ளது. இதன் விலை ரூ. 8,999 ஆகும். ஹானர் 7சி மாடல் 3 ஜி.பி. ரேம் 32 ஜி.பி. நினைவகத்துடன் வந்துள்ளது. இதன் விலை ரூ. 9,999 ஆகும். இதில் உயர் ரகமாக 4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. நினைவகத்துடன் வந்துள்ளது. இதன் விலை ரூ. 11,999. இந்த மாடல் அமேசான் இணையதளத்தில் கிடைக்கும். இரண்டு மாடலுமே கறுப்பு, நீலம், தங்க நிறங்களில் வெளி வந்துள்ளன. ஹானர் 7ஏ மாடலில் 13 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் கொண்ட இரட்டை லென்ஸ் உள்ளது. இந்தியாவில் இரட்டை லென்ஸ்களுடன் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ள ஸ்மார்ட்போன் இதுவே. இதன் முன்பகுதியில் உள்ள 8 மெகா பிக்ஸல் கேமரா ‘செல்பி’ படம் எடுப்பதற்கு மிகவும் ஏற்றது. இதில்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 

வங்கக்கடலில் உருவான காற்ற ழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்ட லமாக மாறும் என்பதால், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது: வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி சற்று வலுவடைந்து தொடர்ந்து அதே பகுதியில் நீடித்து வருகிறது. இது மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வலு மேலும் அதிகரிக்கும். இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் மலைப்பகுதிகள் அடங்கிய கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட’் எடுக்கலாம் தெரியுமா?

இன்று கணினிகளும், ஸ்மார்ட்போன்களும் தொடுதிரை நுட்பத்திற்கு மாறிவிட்டன. அதன் பயன்பாடுகள் எல்லாம் புதுமையாகவும், எளிமையாகவும் இருப்பது நம்மை கவர்ந்துவிடுகிறது. ஆனால் பழைய தொழில்நுட்பத்தில் பழகிய பலருக்கும், அதில் இருந்த சில வசதிகள், புதியதில் எங்கே இருக்கிறது என்ற தடுமாற்றம் ஏற்படுவது உண்டு. குறிப்பாக அடிக்கடி கணினி- ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதவர்களுக்கு இந்தத் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பு, வழக்கமாக தட்டச்சு கணினிகளில், ‘‘ஸ்கிரீன்ஷாட்” என்ற ஒரு வசதி இருக்கும். இது நமக்கு பல விதங்களில் பயன்படும். திடீரென தோன்றி மறையும் கணினி பிழைகள் மற்றும் நகல் எடுக்க முடியாத, பல்வேறு கோப்புகளை, படிநிலைகளை எளிதில் படம் பிடித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த வசதி ரொம்பவே உதவியாக இருக்கும். ஸ்மார்ட்போன்களில் ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுப்பது மிகவும் எளிது. ஆன்-ஆப் பட்டனை சற்று கூடுதல் அழுத்தம் கொடுத்தால் உடனே ‘ஸ்கிரீன்ஷாட்’ சேமிக்கப்பட்டு விடும். ஆனால் விண்டோஸ்10 போன்ற தொடுதிரை கணினிகளில் இந்த வசதி எங்கிருக்கிறது, எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. விண்டோஸ் 10 கணினியில் இதை

மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய மூன்றாவது கை

மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய மூன்றாவது கை தொகுப்பு: ஹரிநாராயணன் ‘ஒரு நேரத்துல ஒரு வேலையைத்தான் செய்ய முடியும். ஒரே நேரத்துல பத்து வேலையைச் செய்ய எனக்கு என்ன பத்து கையா இருக்கு?’ என்று நமக்கு நெருங்கிய யாரோ ஒருவர், ஏதோ ஒரு சமயத்தில் சொல்லக் கேட்டிருப்போம். அதற்கு காரணம் என்ன? ஒரு சராசரி மனிதனால், ஒரு நேரத்தில் ஒரு வேலையைத்தான் செய்ய முடியும் என்பதுதான் இயல்பு அல்லது இயற்கை. ஆனால் நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருப்பது 21-ம் நூற்றாண்டில்! வேகமும், பன்முகத் திறமையும் இந்த நூற்றாண்டின் அடையாளங்கள் என்றே சொல்லலாம். இன்றைய நவீன வாழ்க்கைக்கு நமக்குத் தேவைப்படுகிற கூடுதல் வேகத்தையும், பன்முகத்தன்மையையும் ரோபாட்டிக்ஸ் மூலமாக தயாரிக்கப்படும் எந்திர மனிதர்கள் அல்லது கருவி களால் நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்கிறார்கள் ரோபாட்டிக்ஸ் துறை விஞ்ஞானிகள். கை கால்களை இழந்தவர்களுக்கு செயற்கையான (கட்டைக்) கை-கால்களை உருவாக்கிய நூற்றாண்டை நாம் கடந்து வந்து சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இப்போது, மூளையால், எண்ணங்களால் கட்டுப் படுத்தி பயன்படுத்தக்கூடிய அதி நவீன செயற்கை கை-கால்களைப் பொருத

மனப்பாடமும், வீட்டுப் பாடமும்...!

நமது பள்ளிக் கல்வி முறையில் நீண்ட காலமாக மனப்பாடமும், வீட்டுப்பாடமும் இருக்கிறது. இரண்டும் ஒவ்வொருவிதமான திறன் வளர்ப்பு பயிற்சிகள் என்றாலும், அதன் விளைவுகள் சிறந்த பலனைத் தந்திருக்கிறதா? என்ற ஆய்வுக்கு வந்திருக்கிறார்கள் கல்வியாளர்கள். அதனால்தான் பள்ளிகளில் 2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தேவையில்லை என்ற கருத்தும், மனப்பாடம் மற்றும் வீட்டுப்பாட முறையை மாற்றி அமைக்கும் முயற்சியும் சமீப காலமாக வலுப்பெற்றுள்ளது. வீட்டுப்பாடம் மற்றும் மனப்பாடம் பற்றிய சிறிய கண்ணோட்டம்... பாடங்கள் எளிதில் மனதில் பதிவதற்காக மனப்பாட பயிற்சி செய்வது சிறந்த மாணவர்களின் பண்பு. முக்கியமான பாடப் பகுதிகள், வாய்ப்பாடுகள், விதிகள், பாடல்கள் போன்றவற்றை அனைத்து மாணவர்களும் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட இவற்றை கண்டிப்பாக மனப்பாடம் செய்து வர வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துவது உண்டு. தேர்வுகளிலும் மனப்பாடப் பகுதியில் இருந்து சில கேள்விகள் கேட்பது உண்டு. மாணவர்கள் எளிதில் மதிப்பெண் பெறவும், தேர்ச்சி பெறவும் மனப்பாட பகுதிகள் துணை நிற்கும். மனப்பாடப் பகுதிகளை மனதில் நிறுத்துவதற்காக மீண்டும், மீண்