சென்னை அண்ணா நகரில் கொள்ளையனை விரட்டி பிடித்த சூர்யாவுக்கு டிவிஎஸ் நிறுவனத்தில் பணி நியமனம்

சென்னை அண்ணா நகரில் கொள்ளையனை விரட்டி பிடித்த சூர்யாவுக்கு டிவிஎஸ் நிறுவனத்தில் பணி நியமனம் ரோட்டரி சங்கம், எஸ்ஆர்எம் குழுமம் சார்பாக ரூ.3 லட்சம் உதவி.செயின் பறிப்பு கொள்ளையனை விரட்டிப் பிடித்த சூர்யாவுக்கு, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டதன்
பேரில் டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரில் கடந்த ஏப்ரல் 17-ம் தேதி அமுதா என்ற டாக்டரிடம் திருவள்ளூர் கண்டிகையைச் சேர்ந்த ஜானகிராமன் (26) என்பவர் நோயாளி போல நடித்து, 10 பவுன் செயினை பறித்துச் சென்றார். அப்போது அமுதாவின் கூச்ச லைக் கேட்டு, சூர்யா என்ற இளைஞர், கொள்ளையனை விரட்டி பிடித்து 10 பவுன் செயினையும் மீட்டார். இதைத்தொடர்ந்து சூர்யாவை நேரில் அழைத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார். அப்போது சூர்யா காவல் ஆணையரிடம், தனக்கு ஏதாவது தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தரும்படி கோரிக்கை வைத்தார். காவல் ஆணையர் முயற்சி எடுத்து, டிவிஎஸ் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக் வேலைக்கு ஏற்பாடு செய்தார். நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து, ஆணையா ளர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில் இளைஞர் சூர்யாவுக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சீனிவாசன் ஏசி மெக்கானிக்காக நியமிக்கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை சூர்யாவிடம் வழங்கினார். மேலும், ரோட்டரி கிளப் ஆப் சென்னை டவர்ஸ் நிர்வாகிகள் ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்கள். எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவர் ரவிபச்சமுத்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர வடக்கு மண்டல கூடு தல் ஆணையாளர் எச்.எம்.ஜெயராம், தெற்குமண்டல கூடுதல் ஆணையாளர் சாரங்கன், இணை ஆணையாளர் (மேற்கு) விஜய குமாரி, அண்ணாநகர் துணை ஆணையர் சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்விச்சோலை - kalvisolai Articles

Comments