காசநோய் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களுக்கு ஆன்லைனில் படிப்பு முதல் முறையாக சென்னை ஐஐடி ஏற்பாடு

காசநோய் சிகிச்சை தொடர்பான சான்றிதழ் படிப்பை டாக்டர்களுக்கு ஆன்லைனில் அளிக்க ஐஐடி ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பாக ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: தேசிய தொழில்நுட்ப கற்றல் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து டாக்டர்களுக்கு காசநோய் சிகிச்சை தொடர்பான ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 8 வார காலம் கொண்ட இந்த படிப்பானது, காசநோய் சிகிச்சை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், தொற்றுநோயியல், நோயைக் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவை இடம்பெறும். இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும். குறிப்பிட்ட ஒரு நோய்க்கான சிகிச்சை தொடர்பாக இதுபோன்று ஆன்லைனில் படிப்பு வழங்குவது இதுவே முதல்முறை. காசநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு இந்தப் படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதோடு மேலும் அதிக கவனத்தோடு சிகிச்சை அளிக்கவும் உதவிகரமாக அமையும். கூடுதல் விவரங்களை onlinecourses.nptel.ac.in என்ற இணையதளத்தில் இருந்து அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments