அடுத்த சில தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொது வாக மேகமூட்டத்துடன் காணப் படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மேகங்கள் உருவாகக்கூடும். ஆலங்குடியில் 12 செமீ மழை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 12 செமீ, புதுக்கோட்டையில் 11 செமீ, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மற்றும் விருதுநகரில் தலா 10 செமீ, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழை பெய்துள்ளது. பலத்த காற்று அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே, மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார் கள். இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments