2018-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார் பில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான sஇலவச பயிற்சி முகாம் , வேப்பேரியில் இயங் கும் பெரியார்அய்.ஏ.எஸ். அகாடமியில் வரும் ஜூலை 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
அதேபோல தலைமைச் செய லக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர் (கிரேடு 2), சார் பதிவாளர் (கிரேடு 2), துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் 1600-க் கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு குரூப்-2 தேர்வு நடை பெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் இந்த தேர்வை எழுத குறைந்தபட்சம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான இலவச கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு வரும் ஜூலை 14 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கத்தில் அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள், தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தேர்வில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறைகளை விளக்க உள்ளனர். இவற்றில் பங்கேற்க விரும் பும் மாணவ, மாணவிகள் பெரியார் அய்.ஏ.எஸ். அகாடமி, 84/1 ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை என்ற முகவரியில் அணுகலாம். 044-2661 8056/9940638537 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
Comments