வோடபோன், ஐடியா இணைப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் ஐடியா பங்கு 4% உயர்வு

வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் இணைவதற்கு தொலைத்தொடர்பு துறை அனுமதி வழங்கி இருக்க்றது. ஒரு முறை ஸ்பெக்ட்ரம் கட்டணம் செலுத்துவது தொடர்பாக இதுவரை நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்ததை அடுத்து அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ரூ.3,900 கோடியை ரொக்கமாகவும், மீதமுள்ள ரூ.3,300 கோடிக்கு வங்கிகள் உத்திரவாதம் அளித்த நிலையில் இந்த இணைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. தொலைத்தொடர்பு துறை அனுமதி வழங்கியதை அடுத்து கம்பெனி பதிவாளரிடம் விண்ணப்பிக்க இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன. ஏற்கெனவே அறிவித்ததன்படி வோடபோன் ஐடியா என நிறுவனத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இந்த இரு நிறுவனங்கள் இணைவதால்இந்தியாவில் பெரிய தொலைத்தொடர்பு நிறு வனமாகவும், உலகின் இரண்டா வது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் மாற இருக்கிறது. இந்த இணைப்புக்கு ஜூலை 9-ம் தேதி நிபந்தனை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. புதிய நிறுவனத்தின் வசம் 35 சதவீத சந்தை இருக்கும். தவிர 43 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் இரு நிறுவனங்களின் இணைப் புக்கு இறுதி ஒப்புதல் கிடைத்து விட்டதால், ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பங்கு நேற்று 4 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. வர்த்தகத்தின் முடிவில் 3.46 சதவீதம் உயர்ந்து 56.80 ரூபாயில் இந்த பங்கு முடிந்தது. இதனால் ஒரே நாளில் ரூ.872 கோடி அளவுக்கு நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்தது. 

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments