விண்ணப்பங்கள் அனுப்ப ஆகஸ்டு 31-ந் தேதி கடைசிநாள் சிறந்த ஆதிதிராவிடர் எழுத்தாளர்களுக்கு விருது தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு மூலம் உருவாக்கப்பட்டு உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் நிதியில் இருந்து 2017-18-ம் ஆண்டிற்கான சிறந்த ஆதிதிராவிடர், மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் என மொத்தம் 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதற்கான நூல் வெளியிட ரூ.40 ஆயிரம் வரை நிதியுதவி அளிக்கப்படும். இதற்காக தங்களது பெயர், முகவரி, படைப்பின் பொருள் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த விவரங்களை tn.gov.in எனும் தமிழக அரசின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். முறையான விண்ணப்பத்துடன் படைப்புகள் எழுத்து வடிவில் 2 பிரதிகள், விண்ணப்பதாரரின் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டு ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் ‘இயக்குனர், ஆதிதிராவிடர் நலம், சேப்பாக்கம், சென்னை-05’ எனும் முகவரிக்கு வந்துசேர வேண்டும். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments