இணையதளம் மூலம் 20 சான்றிதழ்களை பெறலாம் கலெக்டர் தகவல்.

சென்னை மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, வருமானச்சான்று உள்ளிட்ட 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களை இணையதளம் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் ‘ஸ்மார்ட் போன்’ அல்லது கணினி மூலம் விண்ணப்பித்து பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சான்றிதழ்களை பெற https://www.tnesevai.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியில் தங்களை பதிவுசெய்து பயனர் பெயர் (யூசர் நேம்) பெற்ற பின்னர் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம். இதற்கான வழிமுறைகளை https://www.tnesevai.tn.gov.in/videotutorial.html மற்றும் https://www.tnesevai.tn.gov.in/UserManual.html ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம். மேலும் UM-A-NG என்ற செல்போன் செயலி மூலமாகவும் வருமான சான்றிதழ், பிறப்பிடம் மற்றும் இருப்பிடம் ஆகிய 3 சான்றிதழ்களையும் பெறலாம். இதற்கான சேவை கட்டணம் ரூ.60. எனவே பொதுமக்கள் இந்த வசதியை உபயோகித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments