ரஜினிகாந்த் நடித்த 2.0 நவம்பர் 29-ந் தேதி வருகிறது டைரக்டர் ஷங்கர் தகவல்.

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்டு செய்த ‘2.0’ படம், நவம்பர் மாதம் 29-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த தகவலை டைரக்டர் ஷங்கர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் டைரக்டு செய்த ‘எந்திரன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் 2-ம் பாகம், ‘2.0’ என்ற பெயரில் தயாரானது. படத்தின் கதைப்படி ரஜினிகாந்த், ‘வசீகரன்’ என்ற விஞ்ஞானியாகவும், ‘சிட்டி’ என்ற எந்திர மனிதனாகவும் 2 வேடங்களில் நடித்தார். அவருடன் வில்லனாக பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடித்தார். கதாநாயகியாக எமிஜாக்சன் நடித்து வந்தார். படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் நடந்தது. இந்த படத்துக்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. அதில், சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அத்துடன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. நவம்பர் 29-ந் தேதி அதைத்தொடர்ந்து படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெற்றது. படத்தில் ‘கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்’ காட்சிகள் அதிகமாக இருந்ததால், படத்தை வெளியிடுவதில் காலதாமதமானது. ரஜினிகாந்த் தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு இமயமலையில் நடைபெற்று வந்தது. முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார். அதே நேரத்தில், ‘2.0’ படம் திரைக்கு வருவது பற்றிய அறிவிப்பை டைரக்டர் ஷங்கர் தனது ‘டுவிட்டர்’ மூலம் வெளியிட்டார். அதன்படி, அந்த படம் வருகிற நவம்பர் மாதம் 29-ந் தேதி வெளிவர இருக்கிறது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments