தமிழகத்தில் 10 ஊர்களில் இருந்து ஒலிபரப்பு சேலம், ஈரோடு, வேலூரில் ஹலோ எப்.எம். இன்று தொடக்கம்

சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய நகரங்களில் ஹலோ எப்.எம். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் 10 ஊர்களில் இருந்து ஹலோ எப்.எம். ஒலிபரப்பாக இருக்கிறது. வெற்றிப்பயணம் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தமிழ் மக்களின் உள்ளத்தோடும், உணர்வோடும் உறவாடி வெற்றி பெற்ற ஹலோ எப்.எம். பண்பலை அலைவரிசை சேலம், ஈரோடு, வேலூரில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தனது பயணத்தை தொடங்குகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் பயணத்தை தொடங்கிய ஹலோ.எப்.எம். தற்போது தமிழகம் முழுவதும் 42 லட்சம் நேயர்கள் விரும்பும் சிறந்த வானொலி என்ற பெருமையுடன், தனக்கென்று தனி இடம் பிடித்து தன்னிகரில்லாத வானொலியாக திகழ்கிறது. 10 இடங்கள் ஏற்கனவே சென்னை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து ஹலோ எப்.எம் ஒலிபரப்பாகிறது. தற்போது சேலம், ஈரோடு, வேலூரில் தொடங்கப்படுவதன் மூலம் 10 ஊர்களில் இருந்து ஹலோ எப்.எம். ஒலிபரப்பாக இருக்கிறது. உள்ளூர் தொகுப்பாளர்களின் திறமையால் அந்த பகுதி மக்களின் உணர்வுகளோடு உறவாடும் நிகழ்ச்சிகளாலும் வெற்றிக்கொடி நாட்டி வரும் ஹலோ எப்.எம். ஈரோடு, சேலம், வேலூர் மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களின் பேராதரவோடு பயணத்தை தொடங்குகிறது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை மண்மணம் மாறாத குரல்கள் ஒலிக்க உங்களுக்காக நிகழ்ச்சிகள் வலம் வர உள்ளன. வானொலி என்றால் பாட்டு மட்டும்தான் என்ற நிலையை மாற்றி நாட்டு நடப்புகள், விளையாட்டு, ஊர்வம்பு, பொழுதுபோக்கு என்று தமிழ் நேயர்களின் உள்ளங்களோடும், உணர்வுகளோடும் உறவாடும் நிகழ்ச்சிகளை ஹலோ எப்.எம். வழங்கும். அத்துடன் நேயர்கள் தங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உடனடியாக பகிர்ந்து கொள்ளும் விவாத மேடையாகவும் ஹலோ எப்.எம். வலம் வரும்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments