வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (06.07.2018)சூறைக் காற்றுடன் மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று சூறைக் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் வெள்ளியன்று (இன்று) இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடும்படியாக எங்கும் மழை பெய்யவில்லை. தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசுவதால், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் மணிக்கு 45 கிமீ வேகத்திலும், தென் கடலோரப் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்திலும் காற்று வீச வாய்ப்புள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments