நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம்

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code
நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் லிம்ரா நிறுவனம் ஆலோசனை. நீட் தேர்வில் குறைவான மதிப் பெண் பெற்றிருந்தாலும் பிலிப்பைன்ஸில் மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று லிம்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக லிம்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி யில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றது, அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காதது என பாதிக்கப்படும் மாணவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். சென்னையில் கடந்த 15 ஆண்டுகளாக மாணவர் களுக்கு வழி காட்டிவரும் லிம்ரா நிறுவனம், இதுதொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. பிலிப்பைன்ஸில் பாரம்பரியமிக்க தவோ மருத்துவப் பல்கலை, லைசியம், சவுத் வெஸ்டர்ன் பல்கலை ஆகியவற்றின் தமிழகப் பிரதிநிதியாக இயங்கும் லிம்ரா நிறுவனம், நம் மாணவர்களுக்கு அங்கு எம்பிபிஎஸ் வகுப் பில் இடம் பெற்றுத் தருகிறது. நீட் தேர்வில் 96 பெர்சன்டைல், பிளஸ் 2-வில் உயிரியல், இயற்பியல், வேதியியலில் 50% மதிப்பெண் பெற்றால் போதும். விசா, பயண ஏற்பாடு, வங்கிக் கடன் பெறுதல் போன்ற சேவைகளையும் லிம்ரா வழங்குகிறது. FMGE ஸ்கிரீனிங் டெஸ்ட்டுக்கான பயிற்சியும் இலவசமாக வழங்கப் படுகிறது. மேலும் விவரங்களுக்கு, ‘லிம்ரா, எண்:177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை-4’ என்ற முகவரியிலோ, 94454 83333, 94457 83333, 99529 22333 என்ற செல்போன் எண்களை தொடர்புகொண்டோ அறியலாம்.

Comments