பாஸ்போர்ட் பெற புதிய திட்டம்

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் ஒருவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய திட்டத்தை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் விண்ணப்பம் அளிக்கப்படும் அலுவலக அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதியில் விண்ணப்பதாரர் வசிக்க வேண்டிய கட்டாயமில்லை. உதாரணமாக டெல்லியை சேர்ந்த ஒருவர் தற்காலிகமாக சென்னையில் வசித்தால் அவர் சென்னையில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். அவர் டெல்லிக்கு செல்ல வேண்டாம். சென்னையில் விண்ணப்பித்து சென்னையிலேயே பெறலாம். எனினும் காவல்துறை சரிபார்ப்பு தேவைப்படும் பாஸ்போர்ட்களுக்கு நிரந்த முகவரியில் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் மொபைல் செயலி ஒன்றையும் சுஷ்மா தொடங்கி வைத்தார்.- பிடிஐ

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments