டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு கடும் சரிவு

தொடர்ந்து மூன்றாவது நாளாக டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிவை சந்தித்தது. கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவாக ஒரு டாலர், ரூ 68.70 என்ற அளவில் வர்த்தகமானது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் வர்த்தக போர் ஆகியவை காரணமாக ரூபாய் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 68.25 என்ற அளவில் இருந்தது. ஆனால் புதன்கிழமை 36 காசுகள் மேலும் சரிந்து ரூ 68.61 என்ற அளவுக்கு கீழிறங்கியது. கடந்த 19 மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. நிலைமை சீரடையாவிடில் அடுத்த சில வாரங்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 70 என்ற அளவுக்குக் கீழிறங்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரை சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளதும் டாலருக்கு நிகரான மாற்று மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.- ஐஏஎன்எஸ்

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments