பள்ளி மாணவர்களுக்கு உள்ளூர் சுற்றுலா ஏற்பாடு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று வைத்த விவாதங்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பதிலளித்து பேசினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:- பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆண்டும் மாவட்ட அளவிலான உள்ளூர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ந் தேதி உலக சுற்றுலா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை மதுரையில் மாநில அளவில் கொண்டாட ரூ.25 லட்சம் ஒதுக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பூம்புகார் சுற்றுலா வளாகம் பழுதுபார்த்து புதுப்பிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் நினைவுக் கோட்டை பழுதுபார்த்து புதுப்பிக்கப்படும். சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு படகு இல்லத்திலும், நீலகிரி மாவட்டம் பைக்காரா படகு இல்லத்திலும் கூடுதல் வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments