மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் இலவச முதுநிலை படிப்பு

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code
தமிழ் முதுகலை பட்டம் படிக்க விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழ் வளர்ச்சி தடைபடும் என்பதை அறிந்து தமிழ் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக பல்கலைக்கழக தமிழியல் துறையில் கட்டணமில்லா இலவச கல்வி இந்த ஆண்டு முதல் வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழக தமிழியல் துறையில் முதுகலை பட்டத்திற்கு சேரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு (2018-19) கல்விக்கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. கட்டணமில்லா இலவசக் கல்வியாக முதுநிலை தமிழ்ப்படிப்பு வழங்கப்பட உள்ளது. தமிழ் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.

Comments