பெட்ரோல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கருத்து

பெட்ரோல், டீசலை சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டுவருவது சாத்தியமற்றது நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கருத்து ராஜீவ் குமார் பெட்ரோலிய பொருட்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கணிசமான வருமானத்தை கொடுக்கின்றன. அதனால் இவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது சாத்தியமற்றது என நிதி ஆயோக் துணைத்தலைவர் ராஜீவ் குமார் தெரிவித் திருக்கிறார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றை புதிய வரி வரம்புக்குள் (ஜிஎஸ்டி) கொண்டு வர வேண்டும் என பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது சாத்தியமற்றது. மாநில மற்றும் மத்திய அரசுக்கு பெரும் அளவிலான வரி பெட்ரோலிய பொருட்கள் மூலமாகவே வருகிறது. மாநில வருமானம் பாதிப்பு ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரி என்பது 28 சதவீதம்தான். இந்த நிலையில் பெட்ரோலிய பொருட்களை கொண்டு வந்தால் மாநில அரசுகளின் வருமானம் பெரும் அளவில் பாதிக்கும். இல்லை எனில் ஜிஎஸ்டியில் புதிய வரி விகிதத்தை உருவாக்க வேண்டும். ஆனால் புதிய வரியை உருவாக்குவது என்பது மிகவும் சவாலான பணி. அனைத்து பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் மாநில அரசுகள் தங்களுடைய வரி விகிதங்களை குறைக்க வேண்டும். இதனை பல முறை பொதுவெளியில் கூறியிருக்கிறேன். தவிர மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மூலமாக கிடைக்கும் வரியை சார்ந்து செயல்படுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். பெட்ரோல் டீசல் மூலமான வரியில் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு ஆண்டுக்கு வசூல் செய்யப்படுகிறது. இதில் ரூ.2 லட்சம் கோடி மாநில அரசுகளுக்கு செல்கிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள் கொண்டுவரப்பட்டால் இவ்வளவு தொகையை மாநில அரசுகள் எவ்வாறு ஈடுகட்டும். தவிர தற்போது கச்சா எண்ணெய் விலையும் அதிகமாக இருக்கிறது. எண்ணெய் விலை குறைந்தால் மட்டுமே பொருளாதார நடவடிக்கைகள் மேம்படும். பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைத்து, இதர வழிகளில் வருமானத்தை உயர்த்துவது குறித்து அரசுகள் யோசிக்க வேண்டும். இதர வழிகளில் வருமானம் உயரத்தொடங்கினால் பொருளாதாரம் மேம்படும். அப்போது பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யலாம் என ராஜீவ் குமார் கூறினார். பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரும் திட்டத்துக்கு மத்திய அரசு சாதகமாக இருக்கிறது. மாநில அரசுகளின் கருத்தொற்றுமைக்கு பிறகு இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என கடந்த டிசம்பரில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் தெரிவித்தார். சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருவதற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். மகாராஷ்டிர முதல் தேவேந்திர பட்நவிஸும் இதே கருத்தினை கூறியிருக்கிறார். இந்த திட்டத்துக்கு நானும் சாதகமாகத்தான் இருக்கிறேன். ஆனால் நடைமுறை சாத்தியம் குறித்து யோசிக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியில் மாநில அரசுகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவசரப்பட்டு இந்த முடிவை எடுக்க கூடாது. மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். இப்போதைக்கு முடியாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் இவற்றை சாத்தியமாக்க வேண்டும் என ராஜீவ் குமார் தெரிவித்தார். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments