மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் பணிப்படி ரத்து

மத்திய அரசு ஊழியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணிப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழுவின் அறிக்கையில் இந்த கூடுதல் பணிப்படியை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த பரிந்துரையை மத்திய பணியாளர் துறை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி இனி மத்திய அரசு ஊழியர்கள் கூடுதல் பணி செய்தால் அதற்கான படி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அனைத்து துறைகளுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆபரே‌ஷனல் பணி என அழைக்கப்படும் மின்துறை, எலக்ட்ரானிக்துறை போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கூடுதல் பணிப்படி வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு துறைகளிலும் இந்த பணிகளில் எந்தெந்த ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments