பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளருக்கு புதிய சலுகை

பிராட்பேண்ட் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளர் களுக்கு புதிய சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம், பிராட்பேண்ட் இணைப்பு வாங் கும் வாடிக்கையாளர் களுக்கு காம்போ திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, ரூ.645 மாதக் கட்டணத்தில் பிராட்பேண்ட் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தரை வழி தொலைபேசி மூலம் எந்த நெட்வொர்க்குக்கும் அளவில்லா அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதேபோல், ரூ.249 மற்றும் ரூ.645-க்கு இடைப்பட்ட பிராட்பேண்ட் திட்டத்தின்கீழ் இணைப்பு வாங்கும் வாடிக்கையாளருக்கு பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் உள்ள எந்த எண்ணுக்கும் தரைவழி தொலை பேசி மூலம் அளவி்ல்லா அழைப்புகளை இலவசமாக செய்யலாம். இந்தச் சலுகை புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர் களுக்கு பொருந்தும் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments