பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் ரூ.87,000 கோடி

கடந்த நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் ரூ.87,000 கோடி கடந்த நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த நஷ்டம் ரூ.87,357 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதில் மோசடி நடந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிக நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.12,283 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. மொத்தமாக உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகிய வங்கிகள் மட்டுமே கடந்த நிதி ஆண்டில் நிகர லாபம் அடைந்திருக்கிறது. சென்னையை தலைமையாக கொண்டு செயல்படும் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,258 கோடியாகவும், விஜயா வங்கியின் நிகர லாபம் ரூ.727 கோடியாகவும் இருக்கிறது. மீதமுள்ள 19 வங்கிகளின் நஷ்டம் ரூ.87,357 கோடியாகும். இந்த அனைத்து வங்கிகளும் கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.473 கோடி அளவுக்கு நிகர லாபத்தை ஈட்டி இருந்தது கவனிக்கத்தக்கது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதால் கடந்த நிதி ஆண்டில் ரூ.12,282 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. முந் தைய 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.1,324 கோடி நிகர லாபம் ஈட்டி இருந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியை தொடர்ந்து ஐடிபிஐ வங்கியின் நிகர நஷ்டம் ரூ.8,237 கோடியாக இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடந்த நிதி ஆண்டில் ரூ.6,547 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் (2016-17) ரூ.10,484 கோடி அளவுக்கு லாபம் ஈட்டியிருந்தது. பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வருவது மற்றும் மோசடிகளின் அளவு அதிகரித்து வருவதன் காரணமாக நஷ்டம் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் நிலவரப்படி இந்திய வங்கித்துறையின் மொத்த வாராக்கடன் ரூ.8.31 லட்சம் கோடியாகும். மோசமான நிதி நிலைமை காரணமாக 11 பொதுத்துறை வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள் ளன. வங்கிகளை மேம்படுத்த நிதி அமைச்சர் பியுஷ் கோயல் ஒரு குழுவினை அமைத்திருக்கிறார். வாராக்கடனை கையாளுவதற்கான நிறுவனத்தை அமைப் பது குறித்து இரு வாரங்களில் இக்குழு பரிந்துரை வழங்கும். இந்த குழுவின் தலைவராக பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் சுனில் மேத்தா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

Comments