39 அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்க அரசு அனுமதி

மத்திய அரசு 3-ம் கட்டமாக 39 அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் அஞ் சல் துறையும் நாட்டின் தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் சில அஞ்சல் அலுவலகங்களை அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களாக பயன்படுத்த முடிவு செய்துள்ளன. முதல் 2 கட்டங்களில் 251 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டது. 2018 மே 14-ம் தேதி நிலவரப்படி இவற்றில் 192 மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சகமும் அஞ்சல்துறையும் இணைந்து 3-ம் கட்டமாக 39 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்கத் திட்டமிட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து நாட்டில் செயல்படும் இத்தகைய மையங்களின் எண்ணிக்கை 289-ஆக உயர்ந் துள்ளது. 3-வது கட்டம் தமிழ்நாட்டில் கடலூர், கன்னியாகுமரி, பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 8 இடங்களில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்படுகின்றன. தற்போது 3-ம் கட்டத்தில் கல்லிடைக்குறிச்சியில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட உள்ளது. மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments