29-ம் தேதி அஞ்சல் குறைதீர் கூட்டம்

தி.நகரில் உள்ள பெருநகர மத்திய பிரிவு அஞ்சல் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னை, தி.நகரில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான அஞ்சலக குறைதீர்ப்பு முகாம் வரும் 29-ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கோட்டத்துக்கு உட்பட்ட தி.நகர், மயிலாப்பூர், கிரீம்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோபாலபுரம், சூளை மேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது புகார்களை அனுப்பலாம். பதிவுக் கடிதங்கள், பார்சல்கள், பணவிடைகள், பதிவு செய்யப்பட்ட தேதி அலுவலக விவரம், அனுப்புபவர், பெறுபவரின் முகவரிகள் ஆகிய தகவல்களை இணைத்து புகார்களை அனுப்ப வேண்டும். அஞ்சலக சேமிப்பு கணக்குகள், பணச்சான்றிதழ்கள் குறித்த புகார்களையும் அனுப்பலாம். மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலக செய்திக் குறிப்பு இதனை தெரிவிக்கிறது.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments