வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 15 பேர் பணி இடமாற்றம்

சென்னை உள்பட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 15 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றி வரும் 15 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.) பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. ஒரு சில வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பி.பாஸ்கரன் (சென்னை மேற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் (அமலாக்க பிரிவு) பொறுப்பையும், ஆர்.சக்திவேல் (திருச்செந்தூர்) நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் பதவியையும், என்.சரவணபவன் (சங்கரன்கோவில்) தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் பதவியையும், கே.பழனிசாமி (மார்த்தாண்டம்) நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் பதவியையும் மறு உத்தரவு வரும் வரை கூடுதலாக கவனிப்பார்கள். இதேபோல் பல்வேறு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. பணி இடமாற்றம் செய்யப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விவரம் வருமாறு:- எண் ஆர்.டி.ஓ. பெயர் பழைய பணி புதிய பணி 1 டி.அறிவழகன் சென்னை வடக்கு திருவண்ணாமலை 2 என்.ராமகிருஷ்ணன் ராணிப்பேட்டை வேலூர் 3 எஸ்.மன்னர்மன்னன் கோவில்பட்டி தூத்துக்குடி 4 டி.மாதவன் சென்னை தெற்கு சென்னை வடகிழக்கு 5 கே.பட்டப்பசாமி ஸ்ரீரங்கம் ராணிப்பேட்டை 6 ஏ.பாண்டியன் ஈரோடு திருச்சி கிழக்கு 7 ஆர்.சவுந்தரராஜூ விழுப்புரம் ஸ்ரீபெரும்புதூர் 8 ஜி.சம்பத்குமார் செங்குன்றம் பூந்தமல்லி 9 ஜெ.சசி நெல்லை செங்குன்றம் 10 ஜி.ரங்கநாதன் தூத்துக்குடி ஈரோடு (அமலாக்க பிரிவு) 11 எஸ்.மோகன் வாணியம்பாடி சென்னை வடக்கு (அமலாக்க பிரிவு) 12 கே.எம்.பிரபாகரன் சென்னை வடகிழக்கு சென்னை தெற்கு (அமலாக்க பிரிவு) 13 கே.முருகன் நாகர்கோவில் விருதுநகர் (அமலாக்க பிரிவு) 14 கே.எஸ்.துரைசாமி நாமக்கல் தெற்கு விழுப்புரம் (அமலாக்க பிரிவு) 15 ஜி.வெங்கடேஸ்வரன் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீரங்கம் (அமலாக்க பிரிவு) 

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments