பிறந்த குழந்தையை கவனிக்க ஆண் ஊழியர்களுக்கு 15 நாள் விடுமுறை அரியானா அரசு முடிவு

அரசு பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படுவதுபோல், அரசு ஆண் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. புதிதாக பிறந்த குழந்தையை கவனிப்பதற்காக, அனைத்து அரசு ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள் விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ், கல்வி மற்றும் இதர அரசுத்துறைகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களிடையே பேசுகையில் முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் இதை தெரிவித்தார். மேலும், பெண் போலீசாரின் எண்ணிக்கையை 11 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Comments