ஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவு: திருவள்ளூர் பயிற்சி சார் ஆட்சியர் மேக்ராஜ், வேலூர் சார் ஆட்சியராகவும், கடலூர் பயிற்சி சார் ஆட்சியர் சிவனருள், தருமபுரி சார் ஆட்சியராகவும், திண்டுக்கல் பயிற்சி சார் ஆட்சியர் கார்மேகம், கோவை வடக்கு சார் ஆட்சியராகவும், காஞ்சிபுரம் பயிற்சி சார் ஆட்சியர் ரத்னா, திருவள்ளூர் சார் ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சார் ஆட்சியர் கமல்கிஷோர், நாகை சார் ஆட்சியராகவும், கடலூர் ஆட்சி யர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் மீன்வளத் துறை கூடுதல் இயக்குநராகவும், புதுக்கோட்டை சார் ஆட்சியர் கே.எம்.சரயு, கடலூர் சார் ஆட்சியராகவும், வெளிமாநில பணியில் இருந்த பிங்கி ஜோவல், அற நிலையத் துறை கூடுதல் செயலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர் சீதாலட்சுமி, தமிழ்நாடு இசைப் பல்கலை பதிவாளராகவும், விடுமுறையில் இருந்த எஸ்.நாகராஜன், குடும்பநலத் துறை கூடுதல் செயலராகவும், ஸ்ரேயா பி.சிங், நெல்லை ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும், நாகை சார் ஆட்சியர் கார்த்திகேயன், தொழில் வழிகாட்டி, ஏற்றுமதி பிரிவு இயக்குநராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

புதிய செய்தி - puthiya seithi latest news and qr code

Comments