11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் கமிஷனராக எஸ்.மனோகரனும், மதுரை கமிஷனராக டேவிட்சன் தேவாசீர்வாதமும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி முதல் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த இணை கமிஷனர் எஸ்.மனோகரன் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பில் இருந்த பி.நாகராஜன் சென்னை (பயிற்சி) ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் டி.ஐ.ஜி. ஜெ.பாஸ்கரன் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று சென்னை (செயலாக்கம்) ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பயிற்சி ஐ.ஜி.யாக இருந்த கே.பி.சண்முக ராஜேஸ்வரன் மதுரை தென்மண்டல ஐ.ஜி.யாகவும், இதுவரை அப்பொறுப்பில் இருந்த சைலேஷ் குமார் யாதவ் சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.யாகயும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவலர் நல்வாழ்வுத்துறை ஐ.ஜி.யாக இருந்த எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை நகர கமிஷனராகவும், அந்த பதவியில் இருந்த மகேஷ் குமார் அகர்வால் சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு விசாரணை பிரிவு ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை கூடுதல் கமிஷனர்(தலைமை இடம்) எஸ்.என்.சேஷசாயி சென்னை காவலர் நல்வாழ்வுத்துறை ஐ.ஜி.யாகவும், சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி. என்.பாஸ்கரன் தமிழ்நாடு போலீஸ் அகாடமி(ஊனமாஞ்சேரி) ஐ.ஜி. யாகவும், சென்னை தொழில்நுட்ப சேவைகள் டி.ஐ.ஜி. மகேந்தர் குமார் ரத்தோட் நெல்லை போலீஸ் கமிஷனராகவும், சென்னை போலீஸ் பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி. ஆசி அம்மாள், சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டி.ஐ.ஜி.யாகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Comments