10 பேரை உயர் அதிகாரிகளாக நியமிக்க மத்திய அரசு முடிவு

மாநில அரசு, தனியார் துறையைச் சேர்ந்த திறமையான 10 பேரை உயர் அதிகாரிகளாக நியமிக்க மத்திய அரசு முடிவு | மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணை செயலாளர் நிலையில் 10 உயர் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாட்டை கட்டமைப்பதில் பங்களிக்க விருப்பமுள்ள, திறமையான இந்திய குடிமகன்களிடமிருந்து ஜூலை 30-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநில அரசு, பொதுத் துறை நிறுவனங் கள் மற்றும் தனியார் துறைகளில் குறைந் தது 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத் தில் பட்டம் பெற்றிருப்பதுடன், ஜூலை 1, 2018 அன்று 40 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேண்டும். செயல்பாட்டைப் பொருத்து 5 ஆண்டுகள் வரை பதவி நீட்டிக்கப்படும்” என கூறப்பட் டுள்ளது. இதுதொடர்பாக முன்னணி நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. வருவாய், நிதி சேவைகள், பொருளாதார விவகாரம், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன், சாலை போக்குவரத்து, கப்பல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், விமான போக்குவரத்து மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். - பிடிஐ

Comments