Skip to main content

Posts

Showing posts from June, 2018

மகாகவியின் ‘தம்பி’

பாரதியாரால் அன்புடன் ‘தம்பி’ என்று உரிமையோடு அழைக்கப்பட்டு அவரது பேரன்பைப் பெற்ற பெருமைக்குரியவர் பரலி. சு. நெல்லையப்பர். பாரதியார் ‘மகாகவி’ என்பதை மக்களுக்கு முதன்முதலில் எடுத்துரைத்தவர் இவரே. இவர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பாரதியார் நூல்களைத் துணிவுடன் வெளியிட்டார். பாரதியாரின் பொன்னுடலை இறுதியாகச் சுமந்துசெல்லும் பாக்கியம் பெற்றவர்களுள் பரலி. சு. நெல்லையப்பரும் ஒருவர்.

இரும்பு மனிதர்

சர்தார் வல்லபாய் படேல் நீதிமன்றத்தில் வாதாடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு ஒரு தந்தி வந்தது. படேல் அதை வாங்கிப் படித்துவிட்டு தன் கோட் பைக்குள் திணித்துக்கொண்டு வாதத்தைத் தொடர்ந்தார். நீதிமன்றம் கலைந்தபின்பு அவரை தனியே அழைத்த நீதிபதி, ‘‘என்ன செய்தி?’’ என்று கேட்டார். படேல் சிறிதும் பதற்றப்படாமல், ‘‘எனது மனைவி ஜவேரிபாய் இறந்துவிட்டார். நான் கிளம்புகிறேன்’’ என்றார். நீதிபதி திகைத்துவிட்டார். படேல் தான் ஓர் இரும்பு மனிதர் என்பதை இச்சம்பவத்தில் நிரூபித்தார்.

உயர் கல்வி ஆணையம்: கல்வித்துறையை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம் மத்திய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு

கல்வித்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக மத்திய அரசு உயர் கல்வி ஆணையம் அமைக்க முயற்சிப்பதாக வைகோ குற்றம் சாட்டி உள்ளார். சட்ட முன்வடிவு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்றத்தில் 1956-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை உருவாக்கவும், கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நோக்கங்களாக வரையறுக்கப்பட்டது கடந்த 60 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழுவைக் கலைத்து விட்டு, ‘உயர்கல்வி ஆணையம்’ அமைப்பதற்கு சட்ட முன்வடிவு ஒன்றை பொதுமக்கள் கருத்தறிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கண்டனம் உயர்கல்வித் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்து, தனியாரைச் சார்ந்து இயங்கும் நிலையை ஏற்படுத்தி, உயர்கல்வியை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் பெரிதும் ஆபத்தானவை. கண்டனத்திற்கு உரியது. உயர்கல்வி ஆண

கடன் வழங்க பொதுவான இணையதளம் பொதுத்துறை வங்கிகள் ஆலோசனை

தனிநபர் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றை பொதுவான தளத்தின் மூலம் அளிக்க பொதுத்துறை வங்கிகள் ஆலோசித்து வருகின்றன. பொதுவான தளத் தின் மூலம் அனைத்து வங்கிகளும் போட்டியிட முடியும். கடனை திருப்பி செலுத்தும் தகுதிவாய்ந்த கடனாளிகளுக்கு உடனடி கடன் வசதியையும் இதன் மூலம் அளிக்கமுடியும். தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள இந்த யோசனை செயல்படுத்தப்பட்டால் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் அளிப்பதற்கான வசதிகளையும் இதன் மூலம் உருவாக்கலாம் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், வாடிக்கையாளர்கள் தங்களின் கடன் அனுமதிகளுக்கு காத்திருக்கத் தேவையில்லை. இது வங்கித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சி. வங்கித் துறை கட்டமைப்பை மேம்படுத்தியதில் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா ஒரு கட்டம் என்றால், இந்த பொதுவான தளம் இதன் அடுத்த கட்ட வளர்ச்சி. இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு மேற்கொள்ளும் என்று கூறினர். இந்த முயற்சிகளை பொதுத்துறை வங்கிகள் மேற்கொண்டால் தனியார் வங்கிகளுக்கு இணையாக தங்களின் கடன் அளவை கொண்டுவர முடியும் என அரசு நம்புகிறது என்றனர். பொதுத்துறை நிறுவனங்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ ஏற்ற தட்பவெப்பநிலை உள்ளது மயில்சாமி அண்ணாதுரை தகவல்

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தேவையான நீர், நிலம் மற்றும் தட்பவெப்ப நிலை உள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நிலவை ஆராய்ச்சி செய்ய சந்திராயன், செவ்வாயை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் போன்ற செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. சூரியனை ஆராய்ச்சி செய்ய ஆதித்யா செயற்கைக்கோள் அனுப்பப்பட உள்ளது. மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் பங்கேற்பதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி தருகிறோம். இதனால் உலக தரம்வாய்ந்த பொறியாளர்களாக உருவாக முடியும். செவ்வாய், சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா? பயிர் சாகுபடி செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இதில், நிலவைவிட செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ அதிக வாய்ப்புள்ளது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றார்போல் நீர், நிலம் மற்றும் தட்பவெப்ப நிலை உள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தற்போது தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்றார்.

தமிழ்நாடு மாநில உருது அகாடமி விரைவில் அமைக்கப்படும் சட்டசபையில் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில உருது அகாடமி விரைவில் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். தமிழக சட்டசபையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதன் விவரம் வருமாறு:- விஜயதரணி (விளவங்கோடு, காங்கிரஸ்):- இந்தியாவில் இளைஞர்களில் 75 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், 35 சதவீதம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் ஐ.எல்.ஓ. அறிக்கை எச்சரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு கோடிக்கும் குறைவான எண்ணிக்கையில்தான் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பிறைக் கமிட்டி தமிமுன் அன்சாரி (நாகப்பட்டினம், அ.தி.மு.க.):- ரமலான் பண்டிகை பிறை தெரிவதன் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. பிறை பார்ப்பதில் பிழைகள் ஏற்படும்போது தலைமை காஜி விமர்சனத்துக்கு ஆளாகிறார். இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே பிறைக் கமிட்டியை அமைத்து இதை முடிவ

2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை மாநகராட்சி அழைப்பு

மாநகராட்சியின் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2 ஆண்டு செவிலியர் பயிற்சி வகுப்பில் சேர மாணவிகள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2018-19-ம் ஆண்டுக்கான, 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி (ANM Course) வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இக்கல்வியாண்டில் 40 மாணவிகளுக் கான சேர்க்கை நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவி களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த, பொது பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சி வகுப்பில் சேர 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 17 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு 2 ஆண்டுகள் தளர்த் தப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி, இயக்குநர், தொற்றுநோய்

கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் அபாயம்

கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் அபாயம் எடியூரப்பா தலைமையில் பாஜக அவசர ஆலோசனை இரா.வினோத் குமாரசாமி கர்நாடகாவில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வருவதால் ஆட்சி நீடிக்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் எடியூரப்பா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மஜத மாநில தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். இரு கட்சிகளுக்கு இடையே குழப்பம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டார். இந்நிலையில், முதல்வர் குமாரசாமி புதியதாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்தார். இதனை மீறி குமாரசாமி ராகுல் காந்தியின் ஒப்புதலை பெற்று ஜூலை முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதனால் அதிருப்தி அடைந்த சித்தராமையா ஓய்வு எடுப்பதாகக் கூறி மங்களூருவுக்கு சென்றார். ஆனால் அங்கு தனது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியது கர்நாடக அரசியலில் பர

உடல் நிலை குறித்து வதந்தி: “நான் நலமாக இருக்கிறேன்” -பின்னணி பாடகி எஸ்.ஜானகி

உடல் நிலை குறித்து வதந்தி: “நான் நலமாக இருக்கிறேன்” -பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இந்தியாவின் புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். ‘பதினாறு வயதினிலே’ படத்தில் இடம்பெற்ற ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே’, தேவர் மகன் படத்தில் வரும் ‘இஞ்சி இடுப்பழகா’ பாடல்கள் மற்றும் தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா 1 பாடல்கள் என்று 4 தடவை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். எஸ்.ஜானகிக்கு தற்போது 80 வயது ஆகிறது. மகன் முரளி கிருஷ்ணாவுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். 2 வாரங்களுக்கு முன்பு எஸ்.ஜானகிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு அவரது உடல்நிலை குறித்து அடிக்கடி வதந்தி பரவியது. அவர் நலமாக இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நேற்று மீண்டும் உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியானது. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் இதனை பரப்பினார்கள். இந்த நிலையில் எஸ்.ஜானகி நான் நலமாக இருக்கிறேன் என்று அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,

தொடரும் பாசப்போராட்டம் ஆசிரியை பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்கள்

வேலூர் மாவட்ட அரசு பள்ளியில் ஆசிரியை பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களின் பெற்றோரும் பள்ளியை முற்றுகையிட்டனர். பாசப்போராட்டம் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் பள்ளியில் ஆங்கில ஆசிரியர் பகவான் வேறு பள்ளிக்கு மாறுதலாகி சென்றதை தாங்கிகொள்ள முடியாத மாணவ - மாணவிகள் அவரை வேறுபள்ளிக்கு செல்லவிடாமல் பாசப்போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ - மாணவிகள் பாசப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த தமிழாசிரியை விஜயா அங்கிருந்து குடியாத்தம் அருகே உள்ள பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். முற்றுகை ஆசிரியையின் பணியிட மாற்றத்தை கைவிடக்கோரி நேற்று காலை மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்கு வழக்கம் போல பள்ளிக்கு வந்த மாணவ - மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் பெற்றோருடன் பள்ளி முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டம்

தனி அலுவலர்களின் பதவிக் காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தாமதம் ஆவதால் தனி அலுவலர்களின் பதவிக் காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு பேரவையில் மசோதா நிறைவேற்றம்; திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எதிர்ப்பு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தாமதமாகி வருவதால் தனி அலுவலர்கள் பதவிக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி இதற்கான மசோதா சட்டப்பேரவை யில் நேற்று நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஊராட்சிகள், நகராட்சிகள் சட்டத் திருத்த மசோதாக்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக் கல் செய்தார். அதில் கூறப்பட்டி ருப்பதாவது: தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சி மன்றங்களின் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்களிடம் இருந்து வந்துள்ள கோரிக்கை மனுக்களை ஆராய்ந்து வார்டுகளை மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி வ

65 ஆண்டுகளாக இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்படுகிறது உயர் கல்வி ஆணையம் தொடங்க மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயல்பட்டு வருகிறது. 1953-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கல்விசார்ந்த விஷயங்களில் மட்டுமின்றி, தகுதியுள்ள கல்லூரிகளுக்கு நிதி உதவி வழங்குவதும் இதன் பணியாகும். இதனால், கல்வித்தரம் மீது முழுக்கவனம் செலுத்த முடியாததால், பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அது தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், அமைச்சகத்தின் இணையதளத்தில் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. அதுபற்றி கல்வியாளர்கள், பொதுமக்கள் ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணிவரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு, கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தும். மானிய விவகாரங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கவனித்துக் கொள்ள

மலையாளத்திலும் ‘பிக்பாஸ்’ மோகன்லாலுக்கு ரூ.12 கோடி சம்பளம்?

மலையாளத்திலும் ‘பிக்பாஸ்’ மோகன்லாலுக்கு ரூ.12 கோடி சம்பளம்? வட இந்தியாவில் கலக்கிய பிக்பாஸ் டெலிவிஷன் நிகழ்ச்சி இப்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. தமிழ், தெலுங்கில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி உள்ளனர். இதை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். கவர்ச்சி நடிகை ஸ்வேதா மேனனும் இதில் கலந்துகொண்டு இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. வார இறுதி நாட்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து செல்ல மோகன்லாலுக்கு ரூ.12 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மொத்தம் ரூ.45 கோடி செலவு செய்துள்ளனர் என்கிறார்கள். மோகன்லால் மலையாள படத்தில் நடிக்க ரூ.3.50 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மம்முட்டி ரூ.3 கோடி வாங்குகிறார். பிருதிவிராஜ் ரூ.1.50 கோடியும், நிவின்பாலி ரூ.80 லட்சமும் பெறுவதாக கூறப்படுகிறது. இவர்கள் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மலையாளத்தில் வாங்குவதை விட கூடுதல் சம்பளம் கேட்கிறார்கள்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு கடும் சரிவு

தொடர்ந்து மூன்றாவது நாளாக டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிவை சந்தித்தது. கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவாக ஒரு டாலர், ரூ 68.70 என்ற அளவில் வர்த்தகமானது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் வர்த்தக போர் ஆகியவை காரணமாக ரூபாய் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 68.25 என்ற அளவில் இருந்தது. ஆனால் புதன்கிழமை 36 காசுகள் மேலும் சரிந்து ரூ 68.61 என்ற அளவுக்கு கீழிறங்கியது. கடந்த 19 மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான சரிவை சந்தித்துள்ளது. நிலைமை சீரடையாவிடில் அடுத்த சில வாரங்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ரூ 70 என்ற அளவுக்குக் கீழிறங்கக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தக போரை சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுள்ளதும் டாலருக்கு நிகரான மாற்று மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணமாகும்.- ஐஏஎன்எஸ்

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 15 பேர் பணி இடமாற்றம்

சென்னை உள்பட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 15 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சி.சமயமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றி வரும் 15 வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.) பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. ஒரு சில வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பி.பாஸ்கரன் (சென்னை மேற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் (அமலாக்க பிரிவு) பொறுப்பையும், ஆர்.சக்திவேல் (திருச்செந்தூர்) நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலர் பதவியையும், என்.சரவணபவன் (சங்கரன்கோவில்) தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் பதவியையும், கே.பழனிசாமி (மார்த்தாண்டம்) நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் பதவியையும் மறு உத்தரவு வரும் வரை கூடுதலாக கவனிப்பார்கள். இதேபோல் பல்வேறு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. பணி இடமாற்றம் செய்யப்பட்ட வட்டார

கடைகள்-நிறுவனங்களில் பெண்களுக்கு பதவி உயர்வில் வேற்றுமை இருக்க கூடாது சட்ட மசோதா தாக்கல்

சட்டசபையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தாக்கல் செய்துள்ள சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்திய அரசானது 2016-ம் ஆண்டு மாதிரி கடைகள் மற்றும் நிறுவன சட்ட மசோதாவிற்கு ஆலோசனை கூறியுள்ளது. நிறுவனத்தை சுதந்திரமாக திறப்பதற்கும், மூடுவதற்கான காலத்தை வகுத்துரைப்பதற்கு மற்றும் பெண்கள் தங்குவதற்கு, ஓய்வறைக்கும் வகை செய்கிறது. பெண்களுடைய மாண்பிற்கு போதிய பாதுகாப்பிற்கு மற்றும் போக்குவரத்து வசதி போன்றவைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் இரவு பணிக்கு பெண்களை அனுமதிக்க முடியும். பணிக்கு தேர்ந்தெடுத்தல், பயிற்சி, பணிமாறுதல் அல்லது பதவி உயர்வுகள் ஆகியவற்றில் பெண்களுக்கு எதிராக வேற்றுமை இருத்தல் கூடாது. எனவே கடைகளை மற்றும் நிறுவனங்களை புதுப்பிப்பதற்காகவும், பெண் பணியாளருக்கு எதிரான வேறுபாட்டை தடை செய்வதற்காகவும் தமிழ்நாடு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவது அவசியமானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை

குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை அளிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- வட்டி விதிப்பு 1919-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தில் சொத்துவரி செலுத்தும் வரி செலுத்துனருக்கு வரி செலுத்தியதற்காக ஊக்கத்தொகை வழங்குவதற்கும், உரிய காலத்திற்குள் வரியை செலுத்தாதவர்களுக்கு வட்டியை விதிப்பதற்கும் தற்போது வழிவகை இல்லை. 4-வது மாநில நிதி ஆணையமானது சொத்துவரியை காலந்தாழ்த்தாமல் செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கும், கூறப்பட்ட வரியை காலந்தாழ்த்தி செலுத்துபவர்களுக்கு வட்டி விதிப்பதற்கான அவசியத்தை ஆய்வு செய்வதற்கு அரசுக்கு பரிந்துரைகள் செய்துள்ளது. அரசானது அந்த பரிந்துரைகளை கவனமுடன் ஆய்வு செய்த பின்பு, ஏற்றுக்கொள்வதென முடிவு செய்துள்ளது. அதன்படி அரசானது தமிழ்நாடு சட்டம் 4-1919-யை திருத்தம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் மேலும் இந்த சட்ட மச

பள்ளியில் சட்டப்படிப்பு - அமைச்சர் தகவல்

சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் இன்பத்துரை பேசும்போது, பள்ளிகளில் அரசியலமைப்பு சட்டத்தை தெரிந்துகொள்ளும் வகையில் சட்டத்தையும் ஒரு பாடமாக வைக்க இந்த அரசு பரிசீலனை செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘உறுப்பினர் குறிப்பிட்டது நல்ல விஷயம். 6-ம் வகுப்பில் இருந்து இந்த சட்டத்தையும் ஒரு பாடமாக கொண்டுவர பரிசீலிக்கப்படும்’ என்றார்.

காவல், தீயணைப்புத் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை அறிவிக்கை வெளியாகும் என முதல்வர் உறுதி

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார் சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது: தமிழக காவல்துறையில் இம்மாதம் 1-ம் தேதி நிலவரப்படி, அனைத்து பதவிகளிலும் அனுமதிக்கப்பட்ட இடங்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 235 ஆகும். இதில் பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 586. தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் 10 ஆயிரத்து 649. தேர்வு அறிவிக்கை மேலும், 5 ஆயிரத்து 538 இரண்டாம் நிலை காவலர்கள், ஆயிரத்து 480 சார்பு ஆய்வாளர்கள், 34 டிஎஸ்பிக்கள் தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 56 டிஎஸ்பிக்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இவர்கள் அனைவரும் பயிற்சி முடித்து பணியில் சேரும் போது, தற்போதுள்ள காலி பணியிடங்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும். அதே போல், தீயணைப்பு துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப, 1,434 புதிய தீயணைப்போர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள தீயணைப்போர் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படவுள்ளன.

ரூ.342 கோடியில் 90 புதிய திட்டங்கள் காவல் துறையினருக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு நலவாரியம்; காவலர்களுக்கு இலவச உடல் பரிசோதனை ரூ.342 கோடியில் 90 புதிய திட்டங்கள் காவல் துறையினருக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி. ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு நலவாரியம், 30 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலவச முழு உடல் பரிசோதனை என்பன உட்பட காவல் துறையினருக்கு ரூ.342 கோடியில் 90 புதிய அறிவிப்புகளை முதல்வர் கே.பழனி சாமி வெளியிட்டார். சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி கள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர் கள் பேசினர். விவாதத்துக்கு முதல்வர் நேற்று பதிலளித்து பேசினார். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும் குற்றங்கள் வெகு வாக குறைந்துள்ளதாகவும் அப் போது அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து காவல் துறையினருக்காக பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது: காவல் துறையில் 30 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு இலவசமாக முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளுக் க

பெண்களுக்கு பாதகமாகும் மகப்பேறு கால விடுமுறை : 18 லட்சம் பெண்கள் வேலை இழக்கும் நிலை

மத்திய அரசின் மகப்பேறு கால விடுமுறை அதிகரிப்பு திட்டத்தால் 18 லட்சம் பெண்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் புலனாகி இருக்கிறது. அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் மகளிருக்காக ஊதியத்துடனான மகப்பேறு விடுமுறையின் கால அளவை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக மத்திய அரசு உயர்த்தியது. இந்த திட்டம் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை குறைத்துவிட்டதாக டி.எல்.எஸ் என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆறு மாதங்களுக்கு மேல் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதை தவிர்ப்பதற்காக பெண்களை வேலைக்கு அமிர்த்துவதை சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தவிர்த்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு கால் விடுமுறை அதிகரிப்பு திட்டத்தால் 2018-2019 காலக்கட்டத்தில் சுமார் 18 லட்சம் பெண்கள் வேலையை இழக்கும் நிலை உருவாகி இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றத்திற்காக அறிமுகம் செய்யப்பட்ட மகப்பேறு விடுமுறை திட்டம், எதிர்மறையான விளைவை உருவாக்கி இருப்பது மத்திய அரசு வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் பணிப்படி ரத்து

மத்திய அரசு ஊழியர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் வேலை செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணிப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. 7-வது ஊதியக்குழுவின் அறிக்கையில் இந்த கூடுதல் பணிப்படியை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த பரிந்துரையை மத்திய பணியாளர் துறை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி இனி மத்திய அரசு ஊழியர்கள் கூடுதல் பணி செய்தால் அதற்கான படி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு அனைத்து துறைகளுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆபரே‌ஷனல் பணி என அழைக்கப்படும் மின்துறை, எலக்ட்ரானிக்துறை போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கூடுதல் பணிப்படி வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு துறைகளிலும் இந்த பணிகளில் எந்தெந்த ஊழியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத பிஎப் தொகையை எடுத்துக் கொள்ள அனுமதி.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் சந்தாதாரர்கள், வேலையிழந்த 30 நாட்களுக்கு பின்னர் 75 சதவீத பிஎப் தொகை எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர்கள் வேலையிலிருந்து விலகிய ஒரு மாதத்துக்கு பின்னர் தங்களது இபிஎப் கணக்கிலிருந்து 75 சதவீத தொகையை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க இபிஎப் அமைப்பு முடிவு செய்துள்ளது. மேலும் மீதமுள்ள 25 சதவீத தொகையை 2 மாதங்களுக்கு பின்னர் எடுத்துக் கொள்ளவும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் வகை செய்கிறது. தொழிலாளர்கள் வேலையிலிருந்து விலகிய 30 நாட்களில் தங்களது பிஎப் கணக்கிலிருந்து முன்பணம் எடுத்துக் கொள்வதை அனுமதிக்க ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி பிஎப் கணக்கிலிருந்து 75 சதவீதத்தை எடுத்துக் கொண்டு கணக்கை அப்படியே தொடரலாம் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வர் கூறினார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் மத்திய காப்பாளர் குழு தலைவராகவும் கங்வார் உள்ளார். காப்பாளர் குழு கூட்டத்துக்கு பின்னர் இதனை அமைச்சர் கூறினார். தற்போதுவரை தொழிலாளர்கள் வேலையை விட்டு விலகினால் அவர்களது பிஎப் கணக்கிலிருந்து இரண்டு மாதங்களுக்கு பின்னரே இபிஎப் கணக்கிலிரு

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெண்கள் பாதுகாப்பு இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ‘தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன்’ என்கிற அமைப்பு பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து உலகளவில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இது தொடர்பாக ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளைச் சேர்ந்த 550 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. தொலைபேசி வாயிலாகவும், இணையதளம் மூலமும் கடந்த மார்ச் 26-ந் தேதி முதல் மே 4-ந் தேதி வரை இந்த ஆய்வு நடந்தது. இந்தியா முதல் இடம் இந்த ஆய்வின் முடிவுகளை ‘தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன்’ நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதில், உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற மற்றும் ஆபத்தான முதல் நாடு இந்தியா தான் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் பலாத்காரம், வீட்டுவேலைக்காகக் கடத்துதல், கொத்தடிமையாக நடத்துதல், கட்டாயத்திருமணம், பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துதல் போன்றவற்றில் இந்தியா முதல் இடத்தில் இருப்பதாக அந்த ஆய்வு அ

புதிய மகப்பேறு விடுப்பு கொள்கை

புதிய மகப்பேறு விடுப்பு கொள்கை 18 லட்சம் பெண்கள் வேலையில் சேர்வதில் சிக்கல் உருவாகும் புதிய மகப்பேறு விடுப்பு கொள்கை அமல்படுத்தப்பட் டால் 18 லட்சம் பெண்கள் வேலையில் சேர்வதில் சிக்கல் உருவாகும் என வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனமான டீம் லீஸ் அறிக்கை கூறியுள்ளது. மகப்பேறு கால விடுப்பு நடப்பு ஆண்டிலேயே 18 லட்சம் பெண்களுக்கு வேலை தேடுவதில் சிக்கல் உருவாக்கும். 10 துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளில் சிக்கல் ஏற்படும். தற்போது இந்தியாவில் 27% பெண் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த சட்டம் கனடா, நார்வே நாடுகளுக்கு அடுத்து இந்தியாவில் கொண்டுவரப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

வாராக்கடனால் வங்கி சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும் ரிசர்வ் வங்கி அறிக்கை

வாராக்கடன் சிக்கல் மேலும் மோசமாகும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள என நிதி ஸ்திரதன்மை அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒட்டுமொத்த வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறை இருண்ட காலமாக காட்சியளிக்கிறது. 2018 மார்ச் இறுதிவரை வங்கிகளின் வாராக்கடன் 11.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டு இறுதியில் 12.2 சதவீதமாக அதிகரிக்கும். வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறையின் அழுத்தம் அதிகரித்து வருகிறது. வங்கிகளின் வாராக்கடன் அழுத்தம் காரணமாக தற்போது 11 பொதுத்துறை வங்கிகள் பிசிஏ சட்டத்தின் படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் 2018 மார்ச் மாதத்தில் 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டு இறுதியில் 22.3 சதவீதமாக அதிகரிக்கும். இந்த 11 வங்கிகள் தவிர மேலும் 6 வங்கிகள் தங்களது மூலதனச் செயல்பாடுகளில் மோசமாக நிலையில் உள்ளன. பிசிஏ சட்டத்தின் கீழ் ஐடிபிஐ, யூகோ வங்கி, செண்ட்ரல் பேங்க், பாங்க் ஆப் இந்தியா, ஐஓபி, தேனா வங்கி, ஓரியண்டல்

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கருத்து

இந்தியா என்பது 130 கோடி மக்கள் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், இங்கு நடைபெறும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அரசியல் பதவிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். சான்றிதழ் கட்டாயம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது உடல்நலம் குறித்த மருத்துவ சான்றிதழை வேட்புமனுவுடன் கண்டிப்பாக தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பொள்ளாச்சியை சேர்ந்த எஸ்.வி.சுப்பையா கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அவகாசம் வேண்டும் அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், உதவி கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு:- ராஜகோபாலன்:- வேட்பாளர்கள் மருத்துவ சான்றிதழை கண்டிப்பாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்யவேண்டும் என்ற சட்டத்திருத்தம் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் இருந்த இடத்திலேயே இனி பெறலாம்.

வெளிநாட்டுக்கு செல்வோர் பாஸ்போர்ட்டு வேண்டி விண்ணப்பிக்க பாஸ்போர்ட்டு அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும் நிலை தான் தற்போது உள்ளது. இந்த அலுவலகங்கள் பெரிய நகரங்களில் மட்டுமே இருக்கும். இதனால் மற்ற ஊர்களில் வசிப்பவர்கள் இதற்காக நேரில் வந்து அலைய நேரிடும். இந்த நிலையில் இருந்த இடத்திலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் ‘பாஸ்போர்ட்டு சேவா’ என்ற புதிய செயலியை மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று அறிமுகப்படுத்தினார்.இந்த செயலியை செல்போன், கம்ப்யூட்டர், மடிக்கணிகளில் பயன்படுத்தி நாம் குறிப்பிட்ட பாஸ்போர்ட்டு அலுவலகத்தை தேர்வு செய்து விண்ணப்பித்தால் போலீஸ் சரிபார்ப்பு முடிந்த பிறகு தபாலில் பாஸ்போர்ட்டு வீடு தேடி வரும். இதன் மூலம் அலைச்சல் இன்றி பாஸ்போர்ட்டை விரைவாக பெற இயலும். நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், நாடு முழுவதும் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரு பாஸ்போர்ட்டு சேவை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

பள்ளி பாடத்திட்டத்தில் ‘நெருக்கடி நிலை’

பள்ளிப் பாடநூல்களில் நெருக்கடி நிலை குறித்த பாடம் விரைவில் இடம்பெற உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதன் 43-ம் ஆண்டு தினத்தை பாஜக கருப்பு தினமாக கடைப்பிடித்தது. இதையொட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் பங்கேற்றனர். பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்திரா காந்தியால் பிரகடனம் செய்யப்பட்ட நெருக்கடி நிலை, இந்திய வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக இருக்கும். மாணவர்கள் சரியான வரலாற்றை அறிய வேண்டும் என விரும்புகிறோம். எனவே பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யவுள்ளோம். நெருக்கடி நிலை அமலில் இருந்த காலத்தை இரண்டாவது சுதந்திரப் போராட்ட காலமாக கருதுவது ஏன் என்பதை இதன் மூலம் மாணவர்கள் உணர்ந்துகொள்வார்கள்” என்றார்.- ஐஏஎன்எஸ்

பெருகி வரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களினால் நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஐகோர்ட்டு கருத்து

பெருகி வரும் ‘சைபர் கிரைம்’ குற்றங்களினால், நாட்டின் பொருளாதாரத்துக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். விமர்சனம் ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஆசிரியர்கள் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ஆசிரியர்கள் சிலர் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு, அதற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஆசிரியர்கள் தற்போதைய நிலை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரனை சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். நடவடிக்கை இந்த தகவலை நீதிபதியின் கவனத்துக்கு, வக்கீல்கள் சிலர் கொண்டு வந்தனர். விமர்சனம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி என்.கிருபாகரன், சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவர்கள் யார்? என்பதையும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க

ஆயுத குவியல் சிக்கியது எப்படி? ராமேசுவரத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

ஆயுத குவியல் சிக்கியது எப்படி? ராமேசுவரத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அருகே தோண்டதோண்ட ஆயுதங்கள் கிடைத்தன. இவற்றை வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த வெடிகுண்டுகளால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி அந்தோனியார்புரத்தைச் சேர்ந்தவர் எடிசன்(45). மீனவரான இவர் தனது வீட்டுக்கு கழிவு நீர் தொட்டி (செப்டிக் டேங்க்) கட்டுவதற்காக நேற்று முன்தினம் வீட்டுத் தோட்டத்தில் தொழிலாளர்களைக் கொண்டு பள்ளம் தோண்டினார். அப்போது ஒரு இடத்தில் சிறிய ரக இரும்பு பெட்டி தென்பட்டது. அதை உடைத்து பார்த்தபோது துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த எடிசன் போலீஸாருக்குத் தகவல் அளித்தார். போலீஸார் விரைந்து வந்து அப்பகுதியில் ஆழமாக தோண்டிப் பார்த்தபோது, ஆயுதக் குவியல் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்த ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவர் என்.காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ராமேசுவரம் டிஎஸ்பி மகேஷ், மாநில கியூ பிரா

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு முன்னாள் எம்எல்ஏ, மனைவி மகனுக்கு தலா 4 ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு முன்னாள் எம்எல்ஏ, மனைவி மகனுக்கு தலா 4 ஆண்டு சிறை. சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் திமுக எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி, மகனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புளிச்சப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(67), கடந்த 1989 - 91ம் ஆண்டு மற்றும் 1996 - 2001ம் ஆண்டுகளில் வானூர் தொகுதி திமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். எம்எல்ஏவாக பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையின்போது 131 ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களில் குறிப்பிட்ட பகுதிகள் மாரிமுத்துவின் பெயரிலும், மேலும் சில அவரது மனைவி துளசியம்மாள் மற்றும் மகன் பிரகாஷ் பெயரிலும் இருந்தன. இதைத்தொடர்ந்து ரூ.16,88,951 மதிப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் எம்எல்ஏ மாரிமுத்து, அவரது மனைவி துளசியம்மாள் (60) மகன் பிரகாஷ் (36) ஆகியோர் மீது 2004

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி நேர படி ரத்து

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் நேரம் பணியாற்றியதற்கான படி (ஓ.டி. அலவன்ஸ்) ரத்து செய்யப்படுகிறது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. 7-வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அமைச்சகங்கள், துறைகள் அவற்றுடன் இணைந்த கீழ்நிலை அலுவலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது பொருந்தும். இருப்பினும், அமைச்சகங்கள் சாராத, அரசிதழ் பதிவு பெறாத மத்திய அரசு ஊழியர்கள், அதாவது, மின் சாதனங்கள், எந்திரங்கள் ஆகியவற்றை இயக்கும் ஊழியர்கள் தொடர்ந்து கூடுதல் பணி நேர படி பெறுவார்கள். அவர்களின் பட்டியலை தயாரிக்கும்படி அனைத்து அமைச்சகங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘பயோமெட்ரிக்’ முறையில் வருகைப்பதிவேட்டை உறுதி செய்தால்தான் இந்த படி வழங்கப்படும் என்றும், உயர் அதிகாரியின் எழுத்துப்பூர்வமான உத்தரவின்பேரில்தான் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

பாஸ்போர்ட் பெற புதிய திட்டம்

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் ஒருவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய திட்டத்தை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் விண்ணப்பம் அளிக்கப்படும் அலுவலக அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதியில் விண்ணப்பதாரர் வசிக்க வேண்டிய கட்டாயமில்லை. உதாரணமாக டெல்லியை சேர்ந்த ஒருவர் தற்காலிகமாக சென்னையில் வசித்தால் அவர் சென்னையில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது அஞ்சல் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். அவர் டெல்லிக்கு செல்ல வேண்டாம். சென்னையில் விண்ணப்பித்து சென்னையிலேயே பெறலாம். எனினும் காவல்துறை சரிபார்ப்பு தேவைப்படும் பாஸ்போர்ட்களுக்கு நிரந்த முகவரியில் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் மொபைல் செயலி ஒன்றையும் சுஷ்மா தொடங்கி வைத்தார்.- பிடிஐ

மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழி சாலை திட்டம்

சேலம் பசுமை வழிச்சாலையை தொடர்ந்து மதுரை - தஞ்சாவூர் இடையே 8 வழி சாலை திட்டம் சட்டசபையில் அமைச்சர் தகவல். சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இடையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து பேசினார். அப்போது அவர், திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே அமைய உள்ள 6 வழி சாலை திட்டத்தையும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே 6 வழி சாலை திட்டத்திற்கு நிலம் எடுப்பு பணி முடிந்துவிட்டது. தயவுசெய்து அதுபற்றி பேசாதீர்கள். உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன்” என்றார். அப்போது எழுந்து பேசிய தி.மு.க. கொறடா சக்கரபாணி, “இனி நில எடுப்பின்போது தமிழகம் முழுவதும் இதேபோல் இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்படுமா?” என்றார். அதற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் புதிய நில எடுப்பு சட்டத்தின்படி இழப்பீடு வழங்கப்படும். ரோடு போடுவதற்காக மக்களை ரோட்டில் விடாது இந்த அரசு. சிலர், மக்களை மூளை சலவை செய்ய முயற்சி செய்கிறார்கள். அது பலனளிக்காது. அரச

பிஎஸ்என்எல் புதிய காம்போ திட்டம் அறிமுகம்

ரூ.1,999-க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர் களுக்கு புதிதாக காம்போ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ரூ.1,999-க்கு ரீசார்ஜ் செய்தால் ஓர் ஆண்டுக்கு அளவில்லா அழைப்புகளை மேற்கொள்வதோடு, தினமும் 2 ஜிபி டேட்டாவையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். தனியார் செல்போன் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அவ்வப்போது புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன்படி, தற்போது புதிய காம்போ திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.1999-க்கு ரீசார்ஜ் செய்தால் ஓர் ஆண்டு எந்த நெட்வொர்க்குக்கும் அளவில்லா அழைப்புகளை மேற்கொள்ளலாம். அத்துடன் தினமும் 2 ஜிபி டேட்டாவும் வழங்கப்படும். மேலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் செய்யலாம். செப்.22-ம் தேதி வரை இந்த சலுகை வரும் செப்டம்பர் 22-ம் தேதி வரை அமலில் இருக்கும் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.