ஷிவாங்கி பதக்: சிகரம் தொட்ட இளம்பெண்

ஹரியாணாவைச் சேர்ந்த 16 வயது இளம்பெண் ஷிவாங்கி பதக், எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் மீது நேபாளம் வழியாக ஏறிய இளம்பெண் என்ற சாதனையை மே 17 அன்று நிகழ்த்தியிருக்கிறார். எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் மீது ஏறிய மாற்றுத்திறனாளி அருணிமா சின்ஹாவால் ஈர்க்கப்பட்டு இந்தச் சாதனையை நிகழ்த்தியதாகத் தெரிவித்திருக்கிறார் ஷிவாங்கி. இவருக்குமுன், 2014-ம் ஆண்டு, திபெத் வழியாக எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி 13 வயது மாளவத் பூர்ணா சாதனையைப் படைத்திருக்கிறார்

Comments