தனியார் தொலைக்காட்சியில்
“சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை
மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
|
ராஜபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஒரு தனியார் தொலைக்காட்சியில் “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். அவர் பல்வேறு தனிமனித, குடும்ப பிரச்சினைகளில் தலையிடுகிறார். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் காரசாரமான விவாதங்கள், தொகுப்பாளரின் கேள்விகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பெண்களுக்கு சரியான முறையில் மரியாதை அளிப்பதில்லை. விவரம் தெரியாத ஆண்-பெண்களை குறிவைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. குறிப்பாக இந்நிகழ்ச்சி டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக நடத்தப்படுகிறது. இது தனிமனித சுதந்திரத்தை பாதிப்பதாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்“ என கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளுக்கும், தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச
Comments