Skip to main content

அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவு போராட்டத்தை ஒத்திவைப்பதாக கூட்டமைப்பு அறிவிப்பு

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
40 சதவீத ஊனத்துடன் இருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் சுயதொழில் செய்வோர், அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. எனவே அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி நேற்று சென்னை எழிலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர், புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 40 சதவீத ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும், சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைப்பதாக கூட்டமைப்பு நிர்வாகி நம்புராஜன் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எ

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 |  DOWNLOAD