Skip to main content

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு  அமைதி திரும்ப ஒத்துழைக்குமாறு ஆட்சியர் வேண்டுகோள்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
‘ ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு முடிவு செய்துள்ளது. அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று தெரிவித்தார். தூத்துக்குடியில் 3-வது நாளாக நேற் றும் பதற்றம் நீடித்தது. தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் தொடர்ந்தன. நீதிமன்ற உத்தரவால் ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100-வது நாளை எட்டியதை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி ஸ்டெர் லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கல்வீச்சு, தீ வைப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் போலீஸார் துப்பாக் கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 95 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ வைப்பு, கல்வீச்சு தூத்துக்குடியில் 3-வது நாளான நேற்று பதற்றம் சற்று தணிந்திருந்தபோதிலும் சகஜ நிலை திரும்பவில்லை. தீ வைப்பு, கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நேற்றும் நடந்தன. தூத்துக்குடி முத்தையாபுரம் போலீஸ் நிலையம் முன்பு நள்ளிரவில் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். தூத்துக்குடி அண்ணா நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் இரவு தீ வைக்கப்பட்டது. பிரையண்ட் நகர் மற்றும் சாயர்புரத்தில் உள்ள டாஸ் மாக் மதுபானக் கடைகளுக்கு நேற்று காலை சிலர் தீ வைத்தனர். நகரின் பல பகுதிகளில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 17 கார்களின் கண்ணாடிகளை நள்ளிரவில் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது. பல கோடி இழப்பு தூத்துக்குடியில் கடைகள், வணிக நிறுவனங்கள் 3-வது நாளாக நேற்றும் அடைக்கப்பட்டிருந்தன. காமராஜ் காய் கறி மார்க்கெட் நேற்று காலை 5 மணி முதல் 9 மணி வரை திறக்கப்பட்டது. அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதியது. கடைகள் வணிக நிறுவனங்கள் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அம்மா உணவகத்தை 24 மணி நேர மும் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல, பேருந்து போக்குவரத்து 3-வது நாளாக நேற்றும் தொடங்கப்படவில்லை. தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்காததால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் போலீஸார் தூத்துக்குடியில் ஏற்கெனவே ஏடிஜிபி விஜயகுமார் தலைமையில் 5 ஆயிரம்போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ஆயிரம் போலீஸார் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர். இதனிடையே, தூத்துக்குடியில் நேற்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில், வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் பங்கேற்ற அமைதிக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஏற்கெனவே தெரிவித்தபடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையில்லாத திட்டம் வேண்டாம் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. நீதிமன்றத்திலும் அரசு தரப்பில், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை நடத்த அரசு விரும்பவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதில் ஆலைக்கு எதிராகவே அரசு வாதிட்டு வருகிறது. ஆலையைத் திறப்பதற்கு இனி வாய்ப்பில்லை. மக்கள் கோரிக்கை நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. இதை மக்கள் புரிந்துகொண்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எ

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 |  DOWNLOAD