Skip to main content

களைகட்டும் கலைப் படிப்புகள்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
களைகட்டும் கலைப் படிப்புகள் தொழிற்கல்விப் படிப்புகளைப் படித்தால் மட்டுமே சிறப்பான வேலைவாய்ப்பைப் பெற முடியும் என்பதான கற்பிதங்கள் தற்போது மாறி வருகின்றன. அதிலும் உரிய வேலைவாய்ப்புகளுடன், பிற படிப்புகள் தராத சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை கலைப் படிப்புகள். இத்துறையைச் சேர்ந்த அரசியல் அறிவியல், பொது நிர்வாகவியல், பொருளாதாரம், சமூகவியல், வரலாறு உள்ளிட்ட படிப்புப் பிரிவுகளைப் பற்றி இங்கே பார்ப்போம். பொதுவாகப் பள்ளி மேல்நிலை வகுப்புகள் தொடங்கிக் கல்லூரிவரை கலைப் படிப்புகள் என்றாலே, வேறு பாடங்களில் இடம் கிடைக்காதவர்கள், மதிப்பெண் தகுதி குறைந்தவர்கள், சுமாராகப் படிக்கும் மாணவர்கள் ஆகியவர்களுக்கான துறை என்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், நடைமுறையில் கலைப் படிப்புகள் இந்த அவநம்பிக்கைகளை உடைத்துப்போடுகின்றன. தனக்கு விருப்பமான கலைப் பாடத்தைத் தேர்வு செய்வதுடன் அவற்றைத் தரமான கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதன் மூலம் மாணவர்கள் தங்களது தகுதியை மேலும் உயர்த்திக்கொள்ளலாம். டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற செறிவான பாடத்திட்டம் கொண்ட சர்வதேசத் தரத்திலான கல்வி நிலையங்களில் படிக்கலாம் மாணவர்கள் தமது தனிப்பட்ட பாட விருப்பம், விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைப்பது, எதிர்பார்க்கும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து இளங்கலையில் பாடத்தை முடிவு செய்யலாம். தமிழகக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அரசியல் அறிவியல், தத்துவம், பொது நிர்வாகம், சமூகவியல் போன்ற துறைகள் அரிதாகவும், பொருளாதாரம், வரலாறு, இலக்கியம் போன்றவை பரவலாகவும் தேர்வுசெய்யப்படுகின்றன. இளங்கலையில் பொருளாதாரத் துறை வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. உயர் மதிப்பெண் பெறும் மாணவர்கள் பொறியியலுக்கு இணையாகப் பொருளாதாரப் படிப்புக்கான சேர்க்கைக்குப் போட்டிபோடுகிறார்கள். இதைப் படித்துவிட்டு ஐ.இ.எஸ். எனப்படும் இந்திய பொருளாதாரப் பணி அதிகாரியாகவும் ஆகலாம். பொருளாதாரம், புள்ளியியல் இணைந்த ‘எக்கனாமெட்ரிக்ஸ்’ படிப்பு, வேலைவாய்ப்பு அடிப்படையில் தற்போது பிரபலமாகி வருகிறது. இதேபோன்று குடும்பம், அமைப்புகள், சிந்தனைகள் தொடர்பான சமூகவியல் பாடம் சுவாரசியமானதும்கூட. தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வரலாறு படிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராகும் வாய்ப்புகளுடன், போட்டித் தேர்வுகள் முதல் குடிமைப் பணி தேர்வுவரை இலக்காகக் கொண்டவர்கள் எளிமையான இப்படிப்பைத் தேர்வு செய்கின்றனர். சமூக அறிவியல் படிப்புகளைத் தமிழகத்தின் பெரும்பாலான அரசுக் கல்லூரிகள் வழங்குகின்றன. சமூக அடிப்படையிலான பல்வேறு ஊக்கத் தொகைகள் கிடைக்கும் என்பதால் அரசுக் கல்லூரிகளில் செலவின்றிப் படிக்கலாம். டெல்லி லேடி ஸ்ரீராம் (மகளிர்), சென்னை லயோலா, பெங்களூர் கிறைஸ்ட் பல்கலைக்கழகம், மும்பை செயின்ட் சேவியர் போன்றவை சமூக அறிவியல் துறைகளுக்கான இந்தியாவின் ‘டாப்’ கல்லூரிகளில் முதல் வரிசையில் உள்ளன. இளங்கலையைத் தொடர்ந்து விரும்பிய முதுகலை, இளம் முனைவர், முனைவர் என உயர் படிப்புகளை மாணவர்கள் மேற்கொள்ளலாம். இளங்கலையைவிட முதுகலையில் கூடுதலான எண்ணிக்கையில் விருப்பப் பாட வாய்ப்புகள் உள்ளன. இந்த வகையில் அதே துறையில் மட்டுமன்றி வேறு பாடப் பிரிவுகளிலும் முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம். ஆனால், பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிகளுக்கு இளங்கலை, முதுகலை இரண்டிலும் ஒரே பாடத்தை எடுத்துப் படித்திருப்பது அவசியம். கலைப் படிப்புகளில் ஆர்வம் கொண்டோருக்கு அரசு கலைக் கல்லூரிகள் ஏராளமான பாடப் பிரிவுகளுடன் காத்திருக்கின்றன. அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இதில் சேரும். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் கலைப் படிப்புகளில் ஏராளமான முதுநிலைப் பட்டங்களை வழங்குகின்றன. அடுத்ததாக ஜவாஹர்லால் நேரு போன்ற தேசியப் பல்கலைக்கழகங்கள் சர்வதேசத் தரத்திலான முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிலையிலான சமூகப் படிப்புகளை வழங்குகின்றன. திருவாரூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் மதிப்பு வாய்ந்த சமூக அறிவியல் கலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. சென்னை ஐ.ஐ.டி. ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.ஏ., படிப்பை வழங்குகிறது. மும்பை, ஹைதராபாத், கவுகாத்தி ஆகிய மையங்களில் செயல்படும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் சமூகப் பணி தொடர்பான பல்வேறு முதுநிலைப் பட்டம் மற்றும் பட்டயங்களை வழங்குகிறது. எத்துறை சார்ந்த வேலைவாய்ப்பானாலும் அவற்றுக்கான அடிப்படைத் திறன்களைக் கலைப் படிப்புகள் கொண்டிருக்கும். கலைப் பாடங்களைப் படித்தவர்கள் பல்துறை விற்பன்னர்களாக ஜொலிப்பதின் அடிப்படை இதுதான். ஊடகம்: பொருளாதாரம், சமூகவியல் போன்ற துறைகளில் உயர் படிப்பு முடித்தவர்களால் அத்துறை சார்ந்த ஆழமான கட்டுரைகளை எழுத முடியும். இதழியல் சார்ந்து முதுநிலையில் பட்டம் அல்லது பட்டயப் படிப்பை படித்துவிட்டு ஊடகத் துறைக்கு வரலாம். போட்டித் தேர்வுகள்: குடிமைப் பணிக்கான தேர்வில் பெரும்பாலான வினாக்கள் கலைப் பாடங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. அரசியலமைப்பு, வரலாறு, பொருளாதாரம், கலாச்சாரம், சர்வதேச உறவுகள் உள்ளிட்டவற்றைத் தனியாகப் படிப்பதைவிட அதையே பாடமாக எடுத்துப் படிப்பவர்கள் சிறப்பாக வெற்றி பெற முடியும். அதேபோல குரூப் 1 தேர்வு, வங்கித் தேர்வில் கேட்கப்படும் பொது அறிவுக் கேள்விகளுக்குக் கலைப் பாடங்களைப் படித்தவர்களால் சிறப்பாக பதிலளிக்க முடிகிறது. ஆசிரியர் பணி: பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதவும், கல்லூரிகளில் விரிவுரையாளர் ஆவதற்கான NET, SET தகுதித் தேர்வுகள் எழுதவும் கலைப் பாடங்கள் அடிப்படையாக இருப்பதுடன் கூடுதல் அறிவு பெறவும் உதவுகின்றன. குறிப்புகளை வழங்கியவர் முனைவர் பி.கனகராஜ், அரசியல் அறிவியல் துறைத் தலைவர், கோவை அரசு கலைக் கல்லூரி.

Comments

Popular posts from this blog

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எ

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 |  DOWNLOAD