Skip to main content

படிப்பை எளிமையாக்கும் புதிய அப்ளிகேசன்கள்!

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
படிப்பை எளிமையாக்கும் புதிய அப்ளிகேசன்கள்! கணினி யுகத்தில் இது அப்ளிகேசன் காலம் என்றால் மிகையில்லை. ஸ்மார்ட்போன்களின் பெருக்கமும், தேவைகளின் சுருக்கமும் அப்ளிகேசன்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன. கல்வித்துறையிலும் நாள்தோறும் புதிய அப்ளிகேசன்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும், படிப்பை எளிமையாக்கும் சில புதுமையான அப்ளிகேசன்களை அறிவோம்.... டாப்ரேங்கர்ஸ் (TopRankers): வங்கிப் பணிகளுக்கான தேர்வு, சட்டத் தேர்வு, எஸ்எஸ்சி, யூ.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்காக எண்ணற்ற அப்ளிகேசன்கள் வந்துள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது இந்த அப்ளிகேசன். வகுப்புகளிலும், புத்தகங்களில் இருந்தும் எளிமையாக குறிப்பு எடுக்க உதவுகிறது இந்த அப்ளிகேசன். பைஜூஸ் (BYJU’S) : இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் அப்ளிகேசன்களில் ஒன்று பைஜூஸ். கேட், ஜிமாட், ஜே.இ.இ., ஐ.ஏ.எஸ்., ஜி.ஆர்.இ., போன்ற தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கான பல்வேறு சிறப்பு வசதிகள் இந்த அப்ளிகேசனில் உள்ளது. மேலும் மாணவர்களின் தேவை மற்றும் வேண்டுகோளுக்கு ஏற்ப அவ்வப்போது கூடுதல் வசதிகளை சேர்த்துக் கொண்டே வருவது இந்த அப்ளிகேசனின் சிறப்பு. மேலும் இதில் வழங்கப்படும் தகவல்களும், காட்சிகளும் தனித்தன்மையுடன் விளங்குகின்றன. இகுயிக்கர்ஸ் (EQuickes) என்ற அப்ளிகேசன்களிலும் இத்தகைய போட்டித் தேர்வுக்கான பாடக்குறிப்புகள் உள்ளன. இவை ஆன்லைனில் இந்த தேர்வுகளுக்கான புத்தகங்களை விற்பனை செய்வதும் குறிப்பிடத்தக்கது. சிம்பிளிலேர்ன் (Simplilearn) : இந்த அப்ளிகேசன்களும் அதிகமான மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது. படிப்புக்காக மட்டும் அல்லாமல் தொழில்துறை, வாழ்க்கைப் பாதை, தொழில்நுட்பம், வணிகம் போன்ற பலதுறை தகவல்களையும் எளிமையாக திரட்டித் தரவும், பல்வேறு டிப்ஸ்களையும் தருகிறது. எனவே மாணவர் உலகத்தைத் தாண்டி தொழில்நிறுவனங்கள், பணியாளர்கள், வேலைதேடுனர்கள், ஆய்வுத்திட்டங்கள், செயல்திட்டங்களில் ஈடுபடும் குழுவினர் போன்றவர்களும் இந்த அப்ளிகேசன்களை விரும்பி பயன்படுத்தலாம். புரோஷோ (Prozo) : இந்த அப்ளிகேசனும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. புத்தகங்களின் உறைவிடமாகவும், டிஜிட்டல் குறிப்புகளின் மையமாகவும் விளங்குகிறது இந்த அப்ளிகேசன். 400க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாருடன் ஒருங்கிணைந்து இந்த அப்ளிகேசன் வழங்கப்படுவதால், பாடப்புத்தகங்கள் பற்றிய தேடல்களை எளிமையாக்கி, ஒரே நாளில் உங்கள் கைகளில் மெட்டீரியல்களை பெற்றுத் தர துணைபுரிகிறது இந்த அப்ளிகேசன். பாஸ்ட்டூடண்ட்ஸ் (Fastudents) : முழுமையான கல்வி அப்ளிகேசன் என்ற சிறப்பு பெற்றதுடன், அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் கல்வித்துறை அப்ளிகேசன் இது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறை பணியில் உள்ளது. புத்தகங்கள் மட்டுமல்லாது ஸ்டேசனரி வகைகள், கல்வி உபகரணங்கள், போட்டித் தேர்வு தகவல்கள், கல்லூரி பாடப்புத்தகங்கள், பயிற்சித் திட்டங்களுக்கான விவரங்கள் உள்ளிட்ட முழுமையான கல்வித் தேவைகளை நிறைவேற்றுகிறது இந்த அப்ளிகேசன். என்செர்ட் சொல்யூசன் (NCERT Solution) : மத்திய பள்ளிக்கல்வி வாரியமான சி.பி.எஸ்.சி. மாணவர்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அப்ளிகேசன் இது. விளம்பரங்கள் ஏதும் இந்த அப்ளிகேசனில் தோன்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் புரிதல் திறனை எளிமையாக விளக்குவதற்காக பல்வேறு யுத்திகள் கையாளப்பட்ட விளக்கங்கள் இந்த அப்ளிகேசனில் கிடைப்பது சிறப்பு. ஜி.கே. பார்ஆல் (GK for All) : புகழ்பெற்ற அப்ளிகேசன்களில் குறிப்பிடத்தக்கது இது. நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுக்குமான தொகுப்புகள் நிரம்பி வழிகிறது. தினசரி நிகழ்வுகளும் உடனே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தொகுப்பாகவும் கிடைக்கின்றன. டிக்ஸ்னரி ஆப்லைன் : மாணவர்களுக்கு அவ்வப்போது வரும் சொற்பொருள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக இணைய வசதி இல்லாமலேயே அகராதி சொற்களஞ்சியமாக செயல்படுகிறது English to Hindi Dictionary offline அப்ளிகேசன். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் சொற்களுக்குப் பொருள் அறியவும், சொற்றொடர்களை மொழி பெயர்த்து அறியவும் இந்த அப்ளிகேசன் உதவியாக உள்ளது. இதேபோல வார்த்தை வளத்தை பெருக்கிக் கொள்வதற்காக வொக்கபுலரி என்ற அப்ளிகேசனும் இணையத்தில் கிடைக்கிறது. இந்த அப்ளிகேசனில் பல தங்கள் சேவைக்கேற்ப கட்டணம் விதிக்கின்றன. சிலவற்றை சிறிது காலத்திற்கு இலவசமாக பயன்படுத்த முடியும். மாணவர்கள் தங்கள் தேவைக்கேற்ற அப்ளிகேசனை பயன்படுத்தி அறிவையும், வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எ

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 |  DOWNLOAD