சில்லறை கடன் வழங்கும் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தாலும் கடன் பெற தகுதியுள்ள 22 கோடிப் பேரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே வங்கிகள் கடன் வழங்குவதாக சிபில் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கடன் பெற தகுதியுள்ள 15 கோடிப் பேருக்கு வங்கிகள் கடன் அளிக்காமல் தவறவிடுவதாகவும், வெறும் 7.2 கோடிப் பேருக்கு மட்டுமே கடன் அளிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
சரியான வயது, வருமானம் போன்ற கடன் பெறும் தகுதிகள் இருந்தும் வங்கிகளால் தவறவிடப்பட்டுள்ள 15 கோடிப் பேரில் கடந்த காலங்களில் கடன் பெற்று, இப்பொழுது கடன் எதுவும் பெறாதவர்களும் உள்ளனர் என சிபில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன் அட்டைகள், தனிநபர் கடன்கள் மூலம் தவறவிடப்பட்டுள்ளவர்களை கடன் அளிக்கும் நிறுவனங்கள் கவர முடியும், இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்றும் சிபில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சிபில் அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை பிரிவு துணைத் தலைவர் யோகேந்திர சிங், தவறவிடப்பட்டுள்ளவர்களுக்கு கடன் அளிப்பதன் மூலம் வங்கி போன்ற கடன் அளிக்கும் நிறுவனங்களுக்கு நிலையான வளர்ச்சி ஏற்படும் என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: தவறவிடப்பட்டுள்ளவர்களை சென்றடைவதற்கான வழிகளை கடன் அளிக்கும் நிறுவனங்கள் கண்டறிய வேண்டும்.தேவையான வயது மற்றும் வருமானத்தை இன்னும் அதிகம் பேர் எட்டும்போது வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்காக கடன் பெறுவது இன்னும் அதிகரிக்கும். டிஜிட்டல் சந்தை வளர்ந்துவரும் நிலையில் கடன் அட்டைகளின் தேவை அதிகரிக்கும் என யோகேந்திர சிங் கூறினார்.
20 முதல் 69 வரை வயதுள்ளவர்களில் வருட வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களான 22 கோடிப் பேர் கடன் பெறத் தகுதியானவர்கள் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 1.4 - 1.6 கோடி என்ற விகிதத்தில் அதிகரித்து 2022-ம் ஆண்டில் 29.5 கோடியாக இருக்கும் என சிபில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளின் வளர்ச்சிப் பாதையை இந்தியா கடைபிடித்தால் 2022-ம் ஆண்டில் நாட்டிலுள்ள மொத்த குடும்பங்கள் பெற்றுள்ள கடன் குறைந்தபட்சமாக ரூ.78 லட்சம் கோடியாகவும், அதிகபட்சமாக ரூ.94 லட்சம் கோடியாகவும் உயரும் என சிபில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.37 லட்சம் கோடியாக இருந்தது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச
Comments