Skip to main content

ஐஃபோன் வடிவமைப்பை நகலெடுத்த விவகாரம் சாம்சங் நிறுவனத்துக்கு 53 கோடி டாலர் அபராதம்

ஐஃபோன் வடிவமைப்பை நகலெடுத்ததாக சாம்சங் நிறுவனம் மீது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனம் 53.3 கோடி டாலரை ஆப்பிள் நிறுவனத்துக்கு செலுத்தவேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில காப்புரிமை விதிகளை மீறியதற்காக மேலும் 50 லட்சம் டாலரை சாம்சங் செலுத்தவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக 2012-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் 105 கோடி டாலரை சாம்சங் செலுத்தவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 2016-ம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு வந்த இந்த வழக்கு பின்னர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. மாவட்ட நீதிமன்றம் அபராதத் தொகையை 39.9 கோடி டாலராக குறைத்தது. ஆப்பிள் நிறுவனத்தின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து அபராதத் தொகையை மேலும் 14 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்து 53.3 கோடி டாலரை சாம்சங் அபராதமாக செலுத்தவேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். சாம்சங் நகலெடுத்த பகுதிகள், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோனின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய பகுதியா அல்லது ஒரு சிறிய பகுதி மட்டும்தானா என்ற வகையில் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். சாம்சங் நகலெடுத்திருக்கிற பகுதி ஆப்பிள் ஐஃபோனின் மிக முக்கியமான பகுதி என ஆப்பிள் நிறுவனம் நீதிமன்றத்தில் வாதிட்டது. சாம்சங் சார்பில் வாதாடிய ஜான் குவின், ஆப்பிள் குறிப்பிடும் வகை ஃபோன்களை விற்றதற்கான லாபத்தின் பங்கை ஆப்பிளுடன் பகிர்ந்துகொள்ள மாட் டோம் என்று சொல்லவில்லை, ஆனால் ஃபோனுக்கான முழு லாபத்தையும் ஆப்பிள் நிறுவனத்துக்கு தர முடியாது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நகர நீதிபதி லூசி கோஹ் சாம்சங் நிறுவனத்துக்கு 53.3 கோடி டாலர் அபராதம் விதித்து உத்தர விட்டார். ஐஃபோனின் விளிம்புகள், திரை உட்பட மூன்று வெளிப்புற வடிவமைப்புகள் மற்றும் ஐகான் நிறங்களை சாம்சங் நகலெடுத்ததாக ஆப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய ஃபோன்களை இனி சாம்சங் விற்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே சாம்சங் நிறுவனம் 39.9 கோடி டாலரை அபராதமாக ஆப்பிளுக்கு செலுத்திவிட்டது. Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu Click to return on the top page

Comments

Popular posts from this blog

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச

திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமல்ல சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண் ணும் ஒன்றாக ஒரே விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து கடந்த ஜூன் 25-ம் தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதி யில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங் களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஓர் அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்ட விரோதமாக ஒன்றாக தங்கியிருந் தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக ‘சீல்’ வைத்து இழுத்து மூடினர். இதையடுத்து, ‘சீலை’ அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும் என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் அந்த விடுதியை நடத் தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எ

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI

TRB PG ZOOLOGY MODEL QUESTION PAPER DOWNLOAD | SURYA TRB COACHING CENTRE, MADURAI | SURYA TRB COACHING CENTRE MADURAI (a place.. You try to achieve) (Exclusively for ZOOLOGY) CELL : 8124602428, 9443564713, 8124825759, 8248826936 |  DOWNLOAD