1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் மே 31 இல் இணையதளத்தில் வெளியீடு | 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் மே 31 முதல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன. தமிழகத்தில் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்த பள்ளி பாடத்திட்டம் இந்த ஆண்டுமுதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக 1,6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதைத்தொடர்ந்து, மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் படிப்படியாக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். இந்த நிலையில், 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். புதிய புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளன. 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மே 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, வெளியிடவில்லை. புதிய பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் (www.tnscert.org) மே 31 இல் வெளியிடப்படுகின்றன. இணையதளத்தின் சர்வர் திறனுக்கு ஏற்ப, புதிய பாடப்புத்தகங்கள் வகுப்புகள் மற்றும் பாடங்கள் வாரியாக மே 31 இல் படிப்படியாக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும், புதிய பாடத் திட்டக்குழுவின் உறுப்பினர்-செயலருமான ஜி. அறிவொளி தெரிவி்த்தார். பள்ளி மாணவர்களுக்கான அனைத்து பாடப்புத்தகங்களையும் வகுப்புகள், பாடங்கள் வாரியாக தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) பார்க்கலாம். அந்த வகையில், 1,6,9,11-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களையும் பாட நூல் கழக இணையதளத்தில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்தார். | DOWNLOAD
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. பெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா ச
Comments