அரசு பள்ளியில் மதுபோதையில் உருண்டு புரண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news
அரசு பள்ளியில் மதுபோதையில் உருண்டு புரண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் | சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரஜினிகாந்த். இவர் நேற்று முன்தினம் பள்ளி நேரத்தில் மது அருந்திவிட்டு ஓய்வறையில் போதையில் உருண்டு புரண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுபற்றி மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி(பொறுப்பு) ஷகிதா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்(பொறுப்பு) சூரன் ஆகியோர் பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். போதையில் இருந்த ரஜினிகாந்த் மீது தண்ணீர் ஊற்றி போதையை தெளிய வைக்கும் முயற்சியில் அதிகாரிகள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் 3 மணி நேரம் கழித்தும் அவருக்கு போதை தெளியவில்லை. இந்தநிலையில் நேற்று மாவட்டக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். பள்ளி வளாகத்தினுள்ளேயே மது அருந்திவிட்டு போதையில் படுத்திருந்த ஆசிரியரின் செயல் கண்டனத்திற்குரியது என்றார். பின்னர் ஆசிரியர் ரஜினிகாந்தை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

Comments