ஜிமெயிலில் புதிய வசதி

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜிமெயில் சேவையின் வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படுவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. வரும் வாரங்களில் புதிய வடிவமைப்பு வெளியாக இருப்பதோடு புதிய அம்சங்களும் வர இருப்பதாக இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘கான்ஃபிடென்ஷியல்’ எனப்படும் தனிப்பட்ட வசதி உள்ளிட்ட அம்சங்கள் வெளியாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாசிக்கப்பட்ட பின் தானாக அழியும் தன்மை கொண்ட மின்னஞ்சல் அனுப்பும் வசதியும் அறிமுகமாகலாம். இந்தப் புதிய அம்சங்களில் பல ஜிமெயில் இன்பாக்ஸ் திட்டத்தில் சோதனை முறையில் ஏற்கெனவே இருப்பவைதான் என்றும் சொல்லப்படுகிறது.

Comments