எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மகள் காப்பி அடிக்க தேர்வு அதிகாரி உதவினாரா?

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கணித தேர்வு நேற்று நடைபெற்றது. பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் தேர்வு மையத்தில் அறை எண் 10-ல் தேர்வு எழுதிய ஒரு மாணவியின் தந்தை, அந்த தேர்வு அறைக்குள் 2 முறை சென்று வந்துள்ளார். அவருடைய மகள் தேர்வு எழுதிய வரிசையில் இருந்த அனைத்து மாணவிகளுக்கும் கூடுதலாக 5 நிமிடம் கொடுத்து, மதியம் 12.50 மணிக்கு விடைத்தாள் பெறப்பட்டு உள்ளது. இதுகுறித்து பிற மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையில், அந்த தேர்வு கூடத்துக்கு சென்ற மாணவியின் தந்தை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை கண்காணிக்கும் பறக்கும் படையில் உள்ள ஆசிரியர் என்பது தெரியவந்து உள்ளது. அவர், தனது மகள் காப்பி அடிக்க உதவி செய்தாரா? அல்லது கூடுதல் நேரம் ஒதுக்குமாறு அந்த அறை கண்காணிப்பாளரிடம் கூறினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை அறிக்கையை கல்வி அதிகாரிகள் நேற்று இரவு கலெக்டரிடம் சமர்ப்பித்து உள்ளனர்.

Comments