காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மற்றும் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
கன்னியாகுமரி முதல் தெற்கு கர்நாடகா வரை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நெல்லை, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. வடதமிழகம் உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் தற்போதே தண்ணீர் பஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கன்னியாகுமரி முதல் தெற்கு கர்நாடகா வரை காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, அதிகபட்சமாக கன்னியாகுமரியில் குன்னூரில் தலா 4 செ.மீ. மழையும், போடிநாயக்கனூர் மற்றும் ராஜபாளையத்தில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Comments