அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் ‘பேஸ் புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டார்

அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் ‘பேஸ் புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டார் தகவல் திருட்டுக்கு பொறுப்பும் ஏற்றார் | பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில் இருந்து, அதன் உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டு உள்ளன. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த திருட்டினால், ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தொடர் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இது தொடர்பாக அவரிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு நேற்று முன்தினம் விசாரணை நடத்தியது. அப்போது அந்தக் குழுவிடம் அவர் நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, “நடந்தது மிகப்பெரிய தவறு. நான் தான் பேஸ்புக்கை தொடங்கினேன். நான்தான் அதை நடத்துகிறேன். எனவே அதில் என்ன நடந்திருக்கிறதோ, அதற்கு நான்தான் பொறுப்பு. இந்தத் தவறுகள் நடப்பதற்கு காரணமான உபகரணங்கள், தீங்கு செய்யாமல் தடுப்பதற்கு நாங்கள் போதுமானதை செய்யாமல் விட்டு விட்டோம் என்பது இப்போது தெளிவாக புரிகிறது. அதுதான் போலி செய்தி, தேர்தல்களில் வெளிநாட்டு குறுக்கீடு, வெறுப்புணர்வு பேச்சு ஆகியவற்றுக்கு காரணங்களாகி விட்டன” என்று கூறினார்.

Comments