புத்தகம் - கவிதை

புத்தகங்கள் அறிவுக்கே ஆசான்

புத்தகங்கள் வாழ்வுக்கே பாடம்

புத்தகங்கள் வளமைக்கே வளம்

புத்தகங்கள் நூலகத்தின் கருவறை

புத்தகங்கள் நூறாண்டு வளர்பிறை

புத்தகங்கள் பாதைக்கே வழிகாட்டி

புத்தகங்கள் பகுத்தறிவுக்கே பலம்

புத்தகங்கள் இளமைக்கே இயல்பு

புத்தகங்கள் மரத்திற்கே நிழல்

புத்தகங்கள் வடிவத்திற்கே விளக்கம்

புத்தகங்கள் வேற்றுமைக்கே ஒற்றுமை..

நா.தேன்நிலவன், பி.எஸ்சி.,

பச்சையப்பன் கல்லூரி,

சென்னை-30.

Comments