மகிழ்ச்சியை மறந்த மாணவ சமுதாயம்

மகிழ்ச்சியை மறந்த மாணவ சமுதாயம் எழுத்தாளர் கோபி பிரபா ஓடி விளையாடு பாப்பா, என்றார் பாரதியார். இன்று விளையாட்டு, மகிழ்ச்சி, ஓய்வு நேரம் என்பதை மறந்து பள்ளி விடுமுறை நாளில் ஆனந்தமாக உறவினர் வீடுகளுக்குச் செல்லுதல், அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்ற உறவுகளை எல்லாம் மறந்து பள்ளி, மதிப்பெண், அது இல்லை என்றால் தனிப் பயிற்சி பள்ளி என்று மாறிப் போயிருக்கிறது. “ஒரு மாணவி கூறும் போது வார விடுமுறை என்பது நாங்கள் சென்ட்ரல் ஜெயிலில் இருந்து சப்-ஜெயிலுக்கு மாறும் நாள்.மே மாத விடுமுறை என்பது பரோல்” என்றாள். சிரிப்பு வந்தாலும் அதுதானே உண்மை. காலை முதல் இரவு வரை படிப்பு என்றுதான் இருக்கிறது ஒரு பள்ளிக் குழந்தையின் வாழ்க்கை. மனஅழுத்தத்தில் சிக்கி மனநிலை தவறிப் போகிறார்கள். இல்லை எனில் தற்கொலை. இன்று நிறைய மாணவ தற்கொலைகள் நடக்கிறது. முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வரும் அன்று சில தற்கொலைகள் நடக்கும்.ஆனால் இன்று....? பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பு, வியாபாரமாகிப் போன கல்வி முறை, அதிகமாக பள்ளி கட்டணம் வாங்கும் பள்ளிதான் நல்ல பள்ளி, அதிக வீட்டுப் பாடம் தரவேண்டும்.அடிக்கடி தேர்வுகள் வைக்க வேண்டும்.ஞாயிறு அன்றும் பள்ளி, சிறப்பு வகுப்புகள் நடக்க வேண்டும் என்று பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.மழலையர் வகுப்பில் சேர்க்கும் போதே தன் குழந்தை டாக்டர், என்ஜினீயர், வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டும், என் மச்சினன் பையன் எல்.கே.ஜி யில் எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண். நூற்றுக்கு நூறு. இவன் தொண்ணூறுதான். எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு என்று புலம்பும் தாயார். குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களாக மாற்றி விடுகிறார்கள்.கல்வி வியாபாரமாகிப் போன இன்றைய நாளில், பெற்றோர்களுக்கு ஒரு பயம் இருப்பது நியாயம்தான்.தன் குழந்தைகளை நல்லபடியாக செட்டில் ஆகி,நல்ல நிலையில் வைக்க வேண்டும் என்ற பரபரப்பு.கோடிக் கணக்கில் பணம் கொட்டிக் கொடுக்க முடியாத நிலை. நீ படிக்கலைன்னா, தெருவுல பிச்சை எடுக்க வேண்டும் என்று சொல்லிச் சொல்லி குழந்தைகள் மனதிலும் ஒரு பயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.|| DOWNLOAD TO READ MORE

Comments