காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு பேருந்து, ஆட்டோ, வேன்கள் ஓடாது; கடைகள் மூடப்படும் என அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு பேருந்து, ஆட்டோ, வேன்கள் ஓடாது; கடைகள் மூடப்படும் என அறிவிப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால், இன்று பேருந்து, ஆட்டோ, வாடகை வேன்கள் ஓடாது என்றும் கடைகள் அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, சாலை, ரயில் மறியல் என தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மட்டுமின்றி மாணவர்கள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே போராட் டக் களமாக மாறியுள்ளது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 1-ம் தேதி நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், மத் திய பாஜக அரசைக் கண்டித்து ஏப்ரல் 5-ம் தேதி (இன்று) தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன. இதுதவிர பாமக, தமாகா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கடைகள் அடைப்பு இன்று நடக்கும் முழு அடைப் புப் போராட்டத்தை ஆதரிப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளை யன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘ஏப்ரல் 11-ம் தேதி அறிவித்த கடையடைப்பு போராட்டம் கைவிடப்படுகிறது. திமுக ஆதரவுக் கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை (இன்று) நடக் கும் முழு அடைப்புப் போராட்டத் தில் கடைகள் அனைத்தையும் அடைத்து மத்திய அரசுக்கு எதிர்ப் பை தெரிவிப்போம்’ என கூறியுள் ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில், ‘காவிரி பிரச்சினைக் காக கடந்த 3-ம் தேதி கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. ஏப்ரல் 5-ம் தேதி (இன்று) நடக்கும் முழு அடைப் புப் போராட்டத்துக்கு பேரமைப்பு தார்மீக ஆதரவை முழுமையாக அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். 2 முக்கிய வணிகர் சங்கங்களும் முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் இன்று அனைத்துக் கடைகளும் மூடப்படும் என கூறப் படுகிறது. பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது மேலும் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொமுச), சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்களும் முழுஅடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், இன்று தமிழகத்தில் பேருந்துகள் ஓடாது என தொமுச தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார். இதுதவிர லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ தொழிற்சங்கங்களும் இந்த முழுஅடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் ஆட்டோக்கள், கார், லாரிகள், வாடகை வேன்கள் எதுவும் இன்று இயங்காது என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு குறுந்தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்கள் சங்கங்கள், மின் வாரிய தொழிற்சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள், முழுஅடைப் பை முன்னிட்டு இன்று மிகப்பெரிய அளவிலான ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. புதுச்சேரி புதுச்சேரியிலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. அங்குள்ள பல்வேறு இயக்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் உரிமை கூட்டமைப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் வரும் 11-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தன. இந்நிலையில், அந்த போராட்டத்தை இன்று திமுக அறிவித்துள்ள போராட்டத்துக்கு ஆதரவாக மாற்றியுள்ளன. அந்த அமைப்புகளும் இன்று நடக்கும் முழுஅடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றன. 1.12 லட்சம் போலீஸார் முழுஅடைப்பு போராட்டத்தின் போது பெரிய அளவில் ரயில் மறியல், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடவும் வாய்ப்புள்ளதாக உளவுப் பிரிவு போலீஸார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சத்து 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் பாதுகாப்பு சென்னையை பொறுத்தவரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தலைமையில் 12 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில், பேருந்து, விமான நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் மத்திய அரசு அலுவலகங்கள், பாஜக அலுவலகத்துக்கும் பாதுகாப்பு போடப்பட் டுள்ளன.

Comments