ஆதார் சேர்க்கை காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆதார் சேர்க்கைக்கான காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி முடிவடைவதாக ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு அறிவிக்கைகள் மூலம் கூறி இருந்தது. தற்போது ஆதார் சேர்க்கைக்கான காலக்கெடுவை ஜூன் 30-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய மின்னணுவியல் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு ஆளுகைப் பிரிவு கடந்த மார்ச் 28-ந் தேதி கடிதம் வெளியிட்டு இருந்தது. அதில், ஆதார் சேர்க்கைக்கான நிபந்தனைகளில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments