30-ம் தேதி திங்கள் கிழமை வங்கிகள் இயங்கும்.தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவியது தவறான தகவல்.

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
சமூக வலைதளங்களில் பரவும் தகவல் வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறையா? அதிகாரிகள் விளக்கம் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. ‘28-ம் தேதி 4-வது சனிக்கிழமை, 29-ம் தேதி ஞாயிறு, 30-ம் தேதி புத்த பூர்ணிமா, மே 1 உழைப்பாளர் தினம் என தொடர்ச்சியாக 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி பரிவர்த்தனைகளை 27-ம் தேதியே (நேற்று) முடித்துக்கொள்ள வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பொதுத்துறை வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: 28-ம் தேதி சனி, 29-ம் தேதி ஞாயிறு ஆகிய இரு நாட்களும் வங்கிகளுக்கு வழக்கம்போல விடுமுறை. மே 1-ம் தேதி செவ்வாயன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விடுமுறை. ஆனால், 30-ம் தேதி திங்கள் கிழமை வங்கிகள் இயங்கும். வட இந்தியாவில் மட்டுமே வங்கிகளுக்கு புத்த பூர்ணிமாவுக்காக விடுமுறை விடப்படுகிறது. தமிழகத்தில் விடுமுறை கிடையாது. எனவே, வங்கிகள் திங்கள்கிழமை வழக்கம்போல செயல்படும். அன்றைய தினம் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளும் நடைபெறும். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என சமூக வலைதளங்களில் பரவியது தவறான தகவல். அடுத்தடுத்து விடுமுறை வருவதைக் கருத்தில் கொண்டு, அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments