தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண். 02/2018 நாள். 25.01.2018-ன்படி 56 பணியிடங்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஆய்வக உதவியாளர் (Forensic Science Department) பதவிக்கான எழுத்துத்தேர்வு 06.05.2018 அன்று முற்பகல் மட்டும் சென்னை உட்பட 8 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் செலுத்தியுள்ள தகுதியான விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்ப எண்ணை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். | The Commission has issued Notification N
kalviseithi, Tamil Nadu Education News, Tamil Nadu News, Indian News, World News, Employment News, Political News, Medicine News, Spiritual News, History, Scientific News, Technology, Cinema News, kalvi seithi, padasalai