TNPSC குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

TNPSC குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 20 | சென்னையில் அரசு சார்பில் நடத்தப் பட உள்ள குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மற்றும் எஸ்எஸ்சி டயர் - 1 ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி வகுப்புகள் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத் தில் திங்கள் முதல் வெள்ளிவரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் சென்னையைச் சேர்ந்தவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்க விரும்புவோர் உரிய கல்விச் சான்றுகளுடன் சென்னை பல்கலைக்கழக மாணவர் வழிகாட்டும் மைய இயக்குநர் அல்லது சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Comments