பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: பள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர் கைது

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: பள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர் கைது | தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு புகாரில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வினாயக மூர்த்தி (வயது 44) என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பெரவள்ளூரில் வசிக்கும் இவர் அரசு பள்ளி கல்வித்துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். இந்த வழக்கில் சுப்பிரமணி என்பவர் முக்கிய குற்றவாளி. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Comments